பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், கைதான பாமகவினர் அனைவரையும் விடுதலை
செய்ய வலியுறுத்தியும், தருமபுரி மாவட்டம், பென்னாகரம், ஒட்டப்பட்டியில் வெள்ளிக்கிழமை கடைகள் அடைக்கப்பட்டன.
குறிப்பாக பென்னாகரம் முழுவதும் அறிவிக்கப்படாத பந்த் போல காட்சியளித்தது. பென்னாகரம் வட்டத்துக்குள்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும், கிருஷ்ணாபுரம், பென்னாகரம் கடை வீதி, பிராமணர் தெரு, வாணியர் தெரு, லாடக்காரத் தெரு, திருவள்ளுவர் நகர், முள்ளுவாடி, இந்திரா நகர், பருவதனஹள்ளி, நாகமரை சாலை ஆகிய பகுதிகளில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
பென்னாகரம் பேருந்து நிலையத்தில் இருந்த பெரும்பாலான கடைகளும் மூடப்பட்டிருந்தன. மேலும், ஆட்டோ, கார், சுற்றுலா வாகனங்கள், லாரிகள் இயக்கப்படாததால் அனைத்துச் சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.
பேருந்துகளுக்கு பாதுகாப்பு: பென்னாகரம், ஒகேனக்கல்லுக்கு வந்து சென்ற பேருந்துகள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன் வந்தன. மேலும், பென்னாகரம் நகர்ப் பகுதி மட்டுமல்லாது சோமனஹள்ளி, இண்டூர் வரையிலும் ஆங்காங்கே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
வணிகர்கள், வியாபாரிகள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்திருந்தனர்.
இதேபோல, தருமபுரி அரசு கலைக் கல்லூரியிலிருந்து தொடங்கி ஒட்டப்பட்டி அவ்வை வழி வரையிலும் சாலைகளின் இருபுறமும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வாழ - 2 எப்போது?
'மீண்டும் திமுக ஆட்சி' வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

35 கி.மீ. மைலேஜ்! டாடா, ஹுண்டாய்க்கு போட்டியாக புதிய காரை களமிறக்கும் மாருதி சுஸூகி!

இளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

