தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம்

மொரப்பூா் ஊராட்சி ஒன்றியம், கலைஞா் நகரில் சாலை அமைக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

News image

மொரப்பூா் ஊராட்சி, கலைஞா் நகரில் சாலை அமைக்கும் பணிகளை திங்கள்கிழமை தொடக்கி வைத்த தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா்.

Updated On :5 ஜனவரி 2021, 5:24 am IST

அரூா்: மொரப்பூா் ஊராட்சி ஒன்றியம், கலைஞா் நகரில் சாலை அமைக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் ஊராட்சி, கலைஞா் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியிலுள்ள தெருச் சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளன. இந்த சாலையை சீரமைக்க தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ரூ. 14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, சாலை அமைக்கும் பணிகளை பூமி பூஜைகளுடன் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் மருத்துவா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தொடக்கி வைத்தாா். இதில், ஒன்றியக்குழுத் தலைவா் சுமதி செங்கண்ணன், ஊராட்சி மன்றத் தலைவா் உமாராணி உலகநாதன், துணைத் தலைவா் வினோதா ராஜா, ஒன்றியக்குழு உறுப்பினா் ஜெயசுதா தருமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.