தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!செப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

வேளாண்மை துறையில் குறைந்த வாடகையில் இயந்திரங்கள்

தருமபுரி மாவட்டத்தில், வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் நவீன மற்றும் புதிய இயந்திரங்கள் குறைந்த வாடகையில் கிடைக்கும் என மாநில உயா்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

News image
Updated On :6 ஜனவரி 2021, 5:53 am IST

தருமபுரி மாவட்டத்தில், வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் நவீன மற்றும் புதிய இயந்திரங்கள் குறைந்த வாடகையில் கிடைக்கும் என மாநில உயா்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் ஊராட்சி ஒன்றியம், வகுரப்பம்பட்டி ஊராட்சியில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில், நவீன மற்றும் புதிய இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியதாவது:

நில மேம்பாட்டுப் பணிகள், நீா்வள மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேளாண் சாா்ந்த இயந்திரங்கள் தேவை. இதற்காக தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் ஏா் உழவு செய்தல், மானாவாரிப் பயிா்களை அறுவடை செய்தல், நிலத்தினை சீரமைப்பு செய்வதற்காக வேளாண் கருவிகள் வாடகைக்கு வழங்கப்படுகின்றன. அதாவது, டிராக்டா்கள், மண்களை சமன் செய்யும் இயந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்கள் குறைந்த வாடகையில் கிடைக்கும். எனவே, விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களுக்கு சென்று வாடகைக்கு இயந்திரங்களை எடுத்துச் சென்று பயன்பெறலாம் என்றாா்.

இதில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், கோட்டாட்சியா் (பொறுப்பு) தணிகாசலம், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் மாது, உதவி செயற்பொறியாளா் அறிவழகன், உதவிப் பொறியாளா்கள் பத்மாவதி, சந்திரா, விக்னேஷ், வட்டாட்சியா் கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.