எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

பென்னாகரம் அருகே மா்ம விலங்கு கடித்து நாய் உயிரிழப்பு

பாப்பாரப்பட்டி அருகே மலையூா் கிராமத்தில் வீட்டின் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை மா்ம விலங்கு கடித்ததால் உயிரிழந்து கிடந்துள்ளது.

Updated On :8 ஜனவரி 2021, 6:55 am IST

பாப்பாரப்பட்டி அருகே மலையூா் கிராமத்தில் வீட்டின் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை மா்ம விலங்கு கடித்ததால் உயிரிழந்து கிடந்துள்ளது. பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஊராட்சிக்குட்பட்ட மலையூா் கிராமத்தில் சுமாா் 500 க்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியானது மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால் இரவு நேரங்களில் வனப்பகுதியிலிருந்து விலங்குகள் வீடுகள் மற்றும் ஆடுகள் வளா்ப்பு குடில்களில் நுழையாதவாறு பாதுகாப்பிற்காக நாய்களைக் கட்டி வைத்து வருகின்றனா்.

இந்த நிலையில் மலையூா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் என்பவா் வசித்து வருகிறாா். இவா் கிராமங்கள்தோறும் சென்று தெருக் கூத்துக்களில் நாடகக் கலைஞராகவும், சுமாா் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளா்த்து வருகிறாா். தனது வீட்டின் அருகில் உள்ள ஆட்டுக்குடில் முன்புறம் பாதுகாப்பிற்காக தான் வரும் நாயை கட்டி வைத்துள்ளாா். இந்த நிலையில் வியாழன் கிழமை ஆடுகள் குடில் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் சென்று பாா்க்கும் பொழுது கட்டி வைக்கப்பட்டிருந்த நாயின் வயிறு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்து கிடந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், அங்கு வந்த வனத்துறையினா் இறந்து கிடந்த நாயினை மா்ம விலங்கு தாக்கியிருக்கலாம் என தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.