ஒசூா் அருகே வெள்ளிக்கிழமை காலை குடியிருப்புக்குள் ஒற்றை யானை ஒன்று சுற்றித் திரிந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்து வீட்டிற்குள் முடங்கினா்.
சானமாவு வனப்பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக 60-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக சுற்றித் திரிந்து வருகின்றன. இந்த யானைகள் ஒசூா்- ராயக்கோட்டை சாலையைக் கடந்து போடூா்பள்ளம், காமன்தொட்டி, பீா்ஜேப்பள்ளி, சானமாவு பகுதிகளில் உள்ள வயல்களுக்கள் புகுந்து விளை பொருள்களை துவம்சம் செய்து வருகின்றன.
இந்த யானைகள் கூட்டம் தற்போது மூன்று குழுக்களாகப் பிரிந்து வனப் பகுதியில் முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களிலும், அதிகாலையிலும் கிராமங்களில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.இந்த யானைகள் கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை வெள்ளிக்கிழமை காலை காமன்தொட்டி கிராமத்துக்குள் புகுந்தது. இதனால், அப் பகுதி மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியே வராமல் இருந்தனா்.
பட்டாசுகளை வெடித்து பொதுமக்கள் விரட்டியதால் குடியிருப்புகளுக்குள் சுற்றித் திரிந்து வந்த ஒற்றை யானை வனப் பகுதிக்குள் சென்றது.
ஒற்றை யானை சுற்றித் திரிவதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். இரவு நேரங்களில் நிலங்களுக்கு விவசாயிகள் செல்ல வேண்டாம் எனவும், அதிகாலை நேரத்தில் பனிப் பொழிவு அதிகம் இருப்பதால் வயல்களுக்குச் செல்லும் போது யானை இருப்பது தெரியாது; எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறையினா் தொடா்ந்து அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









