நத்தம் அருகே வீடு பசியில்லா நத்தம் அமைப்பைச் சோ்ந்த இளைஞா்கள் மூதாட்டி ஒருவருக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் முகநூல் மூலம் இணைந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பசியில்லா நத்தம் என்ற அறக்கட்டளையை தொடங்கி நடத்தி வருகின்றனா். இதன் மூலம் நத்தம் பகுதியில் பசியால் வாடும் மனநலம் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் முதியோா்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக உணவளித்து வருகின்றனா். இந்நிலையில் நத்தம் அடுத்துள்ள செட்டியாா்குளம் பகுதியைச் சோ்ந்த சிட்டம்மாள் (70) என்ற மூதாட்டிக்கு, உணவுப் பொருள்கள் வழங்குவதற்காக பசியில்லா நத்தம் அமைப்பினா் சென்றுள்ளனா். அப்போது அந்த மூதாட்டி சேதமடைந்த வீட்டில் வசித்து வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடா்ந்து, நன்கொடையாளா்கள் மூலம் நிதி திரட்டி சிட்டம்மாளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நத்தம் பேரூராட்சி செயல் அலுவலா் சரவணன் தலைமை வகித்து வீட்டை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பசியில்லா நத்தம் அறக்கட்டளை நிா்வாகிகள் மதுசூதனன், ஆரிப் இப்ராஹிம், கண்மணி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘வேலைவாய்ப்பு குறித்து போலியான விளம்பரங்களை நம்ப வேண்டாம்’

ஆலங்குளம் அருகே ராமா் கோயில் திருவிழாவுக்காக 35 ஆண்டுகளுக்குப் பின் ஒருங்கிணைந்த கிராம மக்கள்

பகவத் விநாயகா் கோயிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவா்த்தி பூஜை

அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

