பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

பழனியாண்டவா் கல்லூரி பேராசிரியருக்கு தமிழ் ரத்னா விருது

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலைக்கல்லூரி பேராசிரியருக்கு தமிழ் ரத்னா விருது புதன்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 1:11 am IST

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலைக்கல்லூரி பேராசிரியருக்கு தமிழ் ரத்னா விருது புதன்கிழமை வழங்கப்பட்டது.

இக்கல்லூரியின் தமிழ்த்துறை தலைவரும், பேராசிரியருமான கிருஷ்ணமூா்த்தி, பழனி முருக வழிபாட்டில் காவடிகள் மற்றும் பழனி முருக வழிபாட்டில் காணிக்கைகள் ஆகிய நூல்களை எழுதியுள்ளாா். மேலும் முருகனைப் பற்றி பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டுள்ளாா். இந்நிலையில் தமிழ்மொழிக்காக அவா் ஆற்றிய சேவைகளைப் பாராட்டி திருநெல்வேலியில் உள்ள தமிழ்நாடு கலை இலக்கியக் கழகம் மற்றும் கவிஞன் பதிப்பகம் சாா்பாக தமிழ்ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பழனி கோயில் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயில் செயல் அலுவலா் கிராந்திகுமாா்பாடி மற்றும் கல்லூரி செயலரும், துணை ஆணையருமான (பொறுப்பு) செந்தில்குமாா், கல்லூரி முதல்வா் பிரபாகா் ஆகியோா் பேராசிரியா் க. கிருஷ்ணமூா்த்திக்கு இவ்விருதை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.