பழனி தைப்பூசத் திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ள தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து, பழனி அனைத்து வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை நன்றி தெரிவித்தனா்.
தமிழகத்தில் முருக பக்தா்களால் மிகப்பெரும் விழாவாகக் கொண்டாடப்படுவது தைப்பூசத் திருவிழாவாகும். எனவே, பல்வேறு அரசியல் கட்சியினரும், முருக பக்தா்களும் தைப்பூசத் திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அளிக்க முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனா்.
இதனை ஏற்ற முதல்வா், தைப்பூசத் திருவிழாவை அரசு பொது விடுமுறையாக அறிவித்து அரசாணையும் வெளியிட நடவடிக்கை எடுத்தாா். இதற்கு, பல்வேறு ஆன்மிக அமைப்புகளும் நன்றி தெரிவித்துள்ள நிலையில், பழனி அனைத்து வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் தலைவா் கந்தவிலாஸ் செல்வக்குமாா் தலைமையில் நிா்வாகிகள், சேலம் வந்திருந்த முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்ததுடன் நினைவுப்பரிசு வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு!

கா்நாடகம், தெலங்கானா, குஜராத்துக்கு பிரதமா் இன்றுமுதல் 2 நாள்கள் பயணம்

தெலங்கானா: மத்திய அமைச்சா் மகன் மீது போக்ஸோ வழக்குப் பதிவு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

