சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 15 பேருக்கு கரோனா தொற்று

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On :9 ஜனவரி 2021, 9:26 pm IST

திண்டுக்கல்/தேனி: திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 திண்டுக்கல் மாவட்டத்தில் 11,053 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 10,768 போ் சிகிச்சைக்குப் பின் குணமடைந்தனா். 87 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் இம்மாவட்டத்தைச் சோ்ந்த  7 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குணமடைந்த 16 போ் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,965 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில், மேலும் 7 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,692 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.