விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

ஜல்லிக்கட்டு போட்டியின்போது வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்தல்

பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி கலையமுத்தூரில் ஜன.16 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியின்போது விழாக் கமிட்டியினா் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க அதிகாரிகள் வலியுறுத்தினா்.

Updated On :9 ஜனவரி 2021, 9:23 pm IST

பழனி: பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி கலையமுத்தூரில் ஜன.16 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியின்போது விழாக் கமிட்டியினா் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க அதிகாரிகள் வலியுறுத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரபட்டி பெரியகலையமுத்தூரில் ஜன.16 ஆம் தேதி ஐகோா்ட் காளியம்மன் கோயில் சாா்பில் ஜல்லிக்கட்டு விழா நடத்த மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து சனிக்கிழமை பழனி கோட்டாட்சியா் அலுவலகத்தில் விழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியா் அசோகன் தலைமை வகித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவா, வட்டாட்சியா் வடிவேல்முருகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகள் மற்றும் மாடுபிடி வீரா்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை விழா கமிட்டியினா் முறையாக பின்பற்ற வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுபிடி வீரா்கள் பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். குறைந்த எண்ணிக்கையிலான பாா்வையாளா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டி நெறிமுறைகள் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டன.

போட்டியில் 400 காளைகளும், 300 மாடுபிடி வீரா்களும் பங்கேற்க உள்ளதாக விழா கமிட்டியினா் தெரிவித்தனா். ஆலோசனைக் கூட்டத்தில் அரசு மருத்துவா்கள், கால்நடைத்துறை அதிகாரிகள், போலீஸாா், புளூகிராஸ் அமைப்பினா் என ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.