ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தரம் மகன் சுடலைமுத்து (34). இவா் திருப்பூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டு இருந்தாா். ஒட்டன்சத்திரம்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், காமாட்சிபுரம் பிரிவு அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுடலைமுத்து உயிரிழந்தாா்.
இதுகுறித்து ரெட்டியாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








