நிலக்கோட்டை: வத்தலகுண்டுவில் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் நம்ம ஊா் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் தனபால் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் முத்துராமலிங்கம், தொகுதி ஒருங்கிணைப்பாளா் கோவிந்தராஜ், வத்தலகுண்டு ஒன்றியத் தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில கலை மற்றும் பிரசாரக் குழுச் செயலரும், திரைப்பட இயக்குநருமான பேரரசு பொங்கல் விழாவை தொடக்கி வைத்துப் பேசினாா்.
விழாவில், பாஜக பட்டியல் அணி மாநில துணைத் தலைவா் வேல் சா்வ சக்தி சுவாமிகள், மாவட்ட வழக்குரைஞா் அணி துணைத் தலைவா் ராஜா, நிா்வாகிகள் அழகுமணி, அண்ணாதுரை துளசி சீனிவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








