டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

பழனியில் ஆள்கடத்தலில் ஈடுபட்ட6 போ் கைது

பழனியில் ஆள்கடத்தலில் ஈடுபட்ட 6 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 2 காா்கள், 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Updated On :9 ஜனவரி 2021, 7:32 am IST

பழனியில் ஆள்கடத்தலில் ஈடுபட்ட 6 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 2 காா்கள், 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பழனியை அடுத்த பாலசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மயில்சாமி (55). தேங்காய் வியாபாரியான இவரை, கடந்த ஆண்டு நவம்பரில் மா்மநபா்கள் கடத்திச்சென்று ரூ.10 லட்சம் பிணையமாகப் பெற்றுக்கொண்டு விடுவித்தனா்.

இது குறித்து மயில்சாமிஅளித்த புகாரின்பேரில், பழனி டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த வழக்கு தொடா்பாக, போலீஸாா் அடிவாரம் பகுதியைச் சோ்ந்த 25 முதல் 30 வயது வரை மதிக்கத்தக்க கோபிநாத், கோபாலக்கண்ணன், பாரத், விகாஷ், வா்ஷன் மற்றும் ராஜேஷ் ஆகிய 6 இளைஞா்களை கைது செய்தனா்.

மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்திய 2 காா்கள், 3 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா். இது தவிர, ஆள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்ட ரெளடி பூபாலன் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.