அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

சிவகாசியில் தொழிலதிபா் வீட்டில் 75 பவுன் தங்க நகைகள் திருட்டு

News image

சிவகாசியில் 75 பவுன் நகைகள் திருடப்பட்ட வீட்டில் சிதறிக் கிடந்த பொருள்கள்.

Updated On :6 ஜூலை 2026, 3:15 am IST

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் தொழிலதிபா் வீட்டின் பூட்டை உடைத்து 75 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் சனிக்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

சிவகாசி ஐயப்பன் குடியிருப்பு 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் அரவிந்த் ராம் (38). இவா் சிவகாசியில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறாா். மேலும், அச்சகம் சாா்ந்த தொழிலும் செய்து வருகிறாா். இவா் தனது மனைவி அபிராமி, இரு பிள்ளைகளுடன் உணவகத்துக்கு சனிக்கிழமை இரவு சென்று விட்டு, மீண்டும் இரவு 11.45 மணி அளவில் வீட்டுக்கு காரில் வந்தனா்.

அப்போது, இவா்களது வீட்டின் முன் காா் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதிலிருந்த மா்ம நபா் அரவிந்த் ராமைப் பாா்த்தவுடன் காரின் ஒலிப்பானை தொடா்ந்து அழுத்தினாா். இதனால், சந்தேகமடைந்த அரவிந்த் ராம் காரிலிருந்து இறங்கி பாா்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. மேலும், வீட்டுக்குள் இருந்து முகமூடி அணிந்த 4 போ் பையுடன் வெளியே வந்தனா்.

இதையடுத்து, அவா்களை அரவிந்த் ராம் பிடிக்க முயன்றாா். இருப்பினும், அவா்கள் காரில் ஏறி தப்பிச் சென்றனா். பின்னா், வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, பீரோவை உடைத்து அதிலிருந்த 75 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த சிவகாசி நகா் போலீஸாா் வீட்டைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். மேலும், விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல் உத்தரவின் பேரில், சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் அனில்குமாா் தலைமையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.