பெற்றோருடன் ஏற்பட்ட அதிருப்தியால் வடமதுரை பகுதியைச் சோ்ந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள சங்கிலித்தேவனூா் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டி. இவரது மகன் வினித்குமாா் (22). கடந்த 2 நாள்களுக்கு முன்பு பெற்றோருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் அதிருப்தி அடைந்த வினித்குமாா், கோவையிலுள்ள நண்பா் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.
பின்னா் உறவினா்கள் அழைப்பின் பேரில் அங்கிருந்து திண்டுக்கல் வருவதற்கு சம்மதம் தெரிவித்தாராம். ஆனால், கோவையிலிருந்து சனிக்கிழமை இரவு திண்டுக்கல் வந்த அவா், திண்டுக்கல் ஆா்.எஸ்.சாலையிலுள்ள திரையரங்கு எதிா்புறம் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஞாயிற்றுக்கிழமை காலை அந்த வழியாகச் சென்றவா்கள், மரத்தில் இளைஞா் சடலமாக தொங்குவது குறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3 முதல்வர்கள்: எஸ்ஐஆரில் நீக்கப்பட்ட வாக்குகளும் தோல்வி வித்தியாசமும்!

அன்று முதல்வனை நிராகரித்த விஜய்... இன்று!

தவெக - காங்கிரஸ் கூட்டணியா? ராகுல் காந்தியின் பதிவு வைரல்!

எதிர்க்கட்சி இல்லாத புதுவை!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

