சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

கர்நாடகத்தில் காங்கிரஸை வீழ்த்த வியூகம்: முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா யோசனை

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலில், கர்நாடகத்தில் பாஜக, கஜக, மஜத ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் காங்கிரஸ் வேட்பாளர்களை வீழ்த்த முடியும் என்று,

Updated On :12 செப்டம்பர் 2013, 9:51 am IST

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலில், கர்நாடகத்தில் பாஜக, கஜக, மஜத ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் காங்கிரஸ் வேட்பாளர்களை வீழ்த்த முடியும் என்று, அந்த மாநில முன்னாள் அமைச்சரும், கஜக மூத்த தலைவருமான எம்.பி.ரேணுகாச்சார்யா யோசனை தெரிவித்தார்.
 இதுகுறித்து தாவணகெரேவில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 அண்மையில் நடைபெற்ற பெங்களூரு ஊரகம், மண்டியா ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் பாஜக, கஜக, மஜத தொண்டர்கள் இணைந்து தேர்தல் பணியாற்றவில்லை.
 எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்ததால், காங்கிரஸ் வேட்பாளர்கள் எளிதில் வெற்றி பெற்றனர்.
 மூன்று அரசியல் கட்சிகளுக்கும் இடையே நிலவிய கூட்டணியை மக்களிடையே வெளிப்படையாகத் தெரிவித்திருந்தால், காங்கிரஸ் தோல்வி கண்டிருக்கும்.
 அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலில், பாஜக, கஜக, மஜத ஆகிய கட்சிகளிடையே கூட்டணி அமைத்து போட்டியிட்டால், காங்கிரஸ் வேட்பாளர்களை எளிதில் தோல்வியடைச் செய்யலாம்.
 பாஜகவுக்கு எடியூரப்பாவின் தேவை அதிகரித்துள்ளது. எடியூரப்பா எடுக்கும் அரசியல் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்.
 நரேந்திர மோடியின் தலைமையை நாடு எதிர்நோக்கியுள்ளது. அவர் மீது எனக்கு மதிப்பும், மரியாதையும் உள்ளது.
 அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலில் நரேந்திர மோடியின் செல்வாக்கை பாஜக சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ரேணுகாச்சார்யா.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.