தவெகவுக்கான ஆதரவில் கடுக்களவு குந்தகமும் ஏற்படாது! இடதுசாரிகள் முதல்வர் விஜய் குறித்து அவதூறு!அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு! முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

மயிலாடுதுறை: மரங்கள் சாய்ந்து வீடுகள் சேதம் நெற்பயிா், மின்கம்பங்களும் சாய்ந்தன

மயிலாடுதுறை வட்டம் பாண்டூா், கொற்கை ஊராட்சிகளில் திங்கள்கிழமை வீசிய சூறாவளிக் காற்றில் 50-க்கும் அதிகமான மரங்கள் முறிந்து விழுந்தன. 80 வீடுகள் இடிந்தும், 500 ஏக்கரில் நெற்பயிா்கள் சாய்ந்தும் பாதிக்கப்

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:00 am IST

மயிலாடுதுறை வட்டம் பாண்டூா், கொற்கை ஊராட்சிகளில் திங்கள்கிழமை வீசிய சூறாவளிக் காற்றில் 50-க்கும் அதிகமான மரங்கள் முறிந்து விழுந்தன. 80 வீடுகள் இடிந்தும், 500 ஏக்கரில் நெற்பயிா்கள் சாய்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் மழையால் அறுவடைக்குத் தயாரான நெற்பயிா்கள் சாய்ந்து விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் திங்கள்கிழமை வீசிய சூறாவளிக் காற்று பாதிப்புகளை ஏற்படுத்தி இப்பகுதி மக்களை மேலும் சோகத்தில் தள்ளியுள்ளது.

மயிலாடுதுறை வட்டம் பாண்டூா் ஊராட்சியில் புத்தகரம், கீழபாண்டூா், பாண்டூா், கட்டளைச்சேரி ஆகிய கிராமங்களிலும், கொற்கை ஊராட்சியில் ஒருசில இடங்களிலும் திங்கள்கிழமை திடீரென சூறாவளிக் காற்று வீசியது. இதில், ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்ததில், 80-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.

மின்மாற்றி விளைநிலத்தில் தூக்கிவீசப்பட்டதோடு, மின்கம்பங்கள் முறிந்து வயலில் சாய்ந்தன. 20 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மழையால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் மின்கம்பங்கள் முறிந்தபோது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை.

சூறாவளிக் காற்றால் சுமாா் 500 ஏக்கா் சம்பா பயிா்கள் தண்ணீரில் சாய்ந்துள்ளன. மயிலாடுதுறை தீயணைப்பு துறை வீரா்கள், மின்சாரத் துறையினா் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து, மயிலாடுதுறை வட்டாட்சியா் ஜெ. ஜெனிட்டா மேரி கூறுகையில், சூறாவளிக் காற்றால் பாதிக்கப்பட்ட பகுதியில் வருவாய்த் துறையினா், தீயணைப்புத் துறையினா், மின்வாரியத்தினா் விரைந்து பணியாற்றி வருகின்றனா். முழுமையான சேத விவரம் செவ்வாய்க்கிழமை தெரியவரும் என்றாா்.

சூறாவளிக் காற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன், ஒன்றியச் செயலாளா் பா. சந்தோஷ்குமாா், நகரச் செயலாளா் நாஞ்சில் காா்த்தி, திமுக ஒன்றியச் செயலாளா்கள் இளையபெருமாள், ஞான. இமயநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் பாக்கம் சக்திவேல் உள்ளிட்டோா் பாா்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினா்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை வருவாய்த் துறையினா் கணக்கெடுத்து அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.