நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெறும்: விஜய் கோயல் நம்பிக்கை

மாநகராட்சி வார்டு இடைத்தேர்தலில் பாஜக வெற்றிபெறும் என்று அக்கட்சியின் தில்லி தலைவர் விஜய் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.

Updated On :2 மே 2013, 12:04 pm IST

மாநகராட்சி வார்டு இடைத்தேர்தலில் பாஜக வெற்றிபெறும் என்று அக்கட்சியின் தில்லி தலைவர் விஜய் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.

கிழக்கு தில்லி மாநகராட்சி, யமுனா வார்டு இடைத்தேர்தலில் போட்டியிடும் ஆஷா தயாளுக்கு ஆதரவாக புதன்கிழமை நடைபெற்ற பிரசாரத்தின் போது விஜய் கோயல் பேசியதாவது:

தில்லியில் அரசின் நிர்வாகம் சீர் குலைந்துள்ளது. 2 ஆண்டுகளில் மின் கட்டணம் 60 சதம் உயர்த்தப்பட்டுள்ளது. குடிநீர் கட்டணம் கடந்த 15 ஆண்டுகளில் 10 முறை உயர்த்தப்பட்டுள்ளது.  கட்டணங்கள் உயர்த்தப்பட்டும், தில்லியில் சில இடங்களில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை.

கிழக்கு தில்லி மாநகராட்சி, யமுனா விஹார் வார்டுக்கும், வடக்கு தில்லி மாநகராட்சி, நாங்லோய் வார்டுக்கும் 5-ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெறும். இதற்கு தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார் விஜய் கோயல்.

பிரசாரத்தின் போது கிழக்கு தில்லி மாவட்ட பாஜக தலைவர் அஜய் மகாவர், முன்னாள் மக்களவை உறுப்பினர் லால் பிகாரி திவாரி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிருஷ்ணா தியாகி, சாகிப் சிங் செüகான், கிழக்கு தில்லி முன்னாள் மேயர் அன்னபூர்ணா மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.