சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்! முதல்வர் விஜய்க்கு உதயநிதி கேள்வி...

தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி உதயநிதி ஸ்டாலின் பதிவு....

Udhayanidhi Stalin posts about crimes against women and girl children in Tamil Nadu

முதல்வர் விஜய் - உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்

Published On :

கடந்த 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளதாகவும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபற்றி எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து அரசை கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவைப் பகிர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன.

நீங்கள் நியமித்ததாக சொன்ன சிறப்பு அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே?

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி!" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Udhayanidhi Stalin posts about crimes against women and girl children in Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.