/

மதுவிலக்கு சோதனை:போலீஸார் மீது தாக்குதல்

காஜியாபாத் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த கடைகளில் சோதனை நடத்தச் சென்ற போலீஸார் தாக்கப்பட்டனர்.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:04 am IST

காஜியாபாத் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த கடைகளில் சோதனை நடத்தச் சென்ற போலீஸார் தாக்கப்பட்டனர்.

அதில் காஜியாபாத் காவல் துறை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) அமித் நாகர் உள்பட 4 போலீஸார் காயமடைந்தனர்.  காஜியாபாதை அடுத்த பிகுவா பகுதியில் டி.எஸ்.பி. அமித் நாகர் தலைமையில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.

சந்தேகத்துக்கிடமான ஒரு கடையை சோதனையிட்ட போது, போலீஸார் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது.

செங்கல், மரக்கட்டைகள், இரும்புத் தடிகள் ஆகியவற்றால் தாக்கி, பிறகு துப்பாக்கியால் சுட்டுவிட்டு அக்கும்பல் தப்பியது.

தகவல் அறிந்த காஜியாபாத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார் ராகவ் சம்பவ இடத்துக்கு விரைந்தார்.

காயமடைந்த டிஎஸ்பி அமித் நாகர் உள்பட 4 போலீஸார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயக் கும்பலை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது என்று போலீஸார் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.