தலைநகர் தில்லியில் போக்குவரத்தில் முக்கிய அங்கமாகத் திகழும் தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களின் பாதுகாப்புக்காக குண்டு துளைக்காத வலுவான பெட்டிகளை (புல்லட் புரூஃப் மோர்ச்சா) அமைக்க மெட்ரோ ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக 200 மோர்ச்சாக்களை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் தருவிக்க உள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மெட்ரோ ரயில்களின் சேவையை தில்லி மெட்ரோ ரயில்வே நிறுவனமும் (டிஎம்ஆர்சி), ரயில் நிலையங்களின் முழுப் பாதுகாப்புப் பணியை துணை ராணுவப் படையான மத்திய தொழிலக பாதுகாப்புப் படையும் (சி.ஐ.எஸ்.எஃப்.) மேற்கொண்டு வருகின்றன.
தில்லியில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு வாயில் பகுதியிலும் பயணிகளிடம் பாதுகாப்புச் சோதனை மேற்கொள்வது, உடமைகளை ஸ்கேன் கருவிகள் மூலம் சோதனை செய்வது, மெட்ரோ ரயில் வளாகப் பகுதிகளைக் கண்காணிப்பது
உள்ளிட்ட பணிகளை சி.ஐ.எஸ்.எஃப். போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் நிலையங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் ஏதும் நிகழ்ந்தால் அதை எதிர்கொள்வதற்கு வசதியாக முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு வாயில் பகுதிகளில் குண்டுதுளைக்காத வலுவான பெட்டிகள் (மோர்ச்சா) வைக்கப்பட்டுள்ளன. அப்பெட்டியின் பின் பகுதியில் சி.எஸ்.ஐ.எஃப். படை வீரர் துப்பாக்கி ஏந்தியவாறு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது வழக்கம்.
ஏதேனும் அசம்பாவித சம்பவம் நிகழ்ந்தால், அதை சாமர்த்தியமாகவும், நேர்த்தியாகவும் எதிர்கொள்ளும் வகையில் இப் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தற்போது, தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களின் முக்கிய சந்திப்பாகத் திகழும் ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் 4 மோர்ச்சாக்களும், மால்வியா நகர், சாகேத் மெட்ரோ ரயில் நிலையங்களில் தலா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தில்லி ரயில் ரயில் நிலையங்களில் பாதுகாப்பை ஆய்வு செய்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அனைத்து ரயில் நிலையங்களிலும் இதுபோன்ற மோர்ச்சாக்களை அமைக்க வேண்டும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு பரிந்துரை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தில்லி, தேசியத் தலைநகர் வலயத்தில் உள்ள 134 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பச்சை வண்ணத்துடன் கூடிய மோர்ச்சாக்கள் விரைவில் பாதுகாப்புக்குப் பயன்படுத்தப்பட உள்ளன.
அதிக எண்ணிக்கையிலான நுழைவு வாயில்கள் உள்ள ரயில் நிலையங்களில் அதற்கு ஏற்ப மோர்ச்சாக்களும், மற்றபடி வழக்கமான வாயில் கொண்ட ரயில் நிலையங்களில் ஒன்றும் அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சி.எஸ்.ஐ.எஃப். செய்தித் தொடர்பாளர் ஹேமேந்திர சிங் கூறுகையில், "காவலரின் தனிப்பட்ட பாதுகாப்புக்கும், எதிரிகளின் சூழ்ச்சியை சமாளிப்பதற்கும் இந்த மோர்ச்சாக்கள் உதவியாக இருக்கும். அவசர காலங்களில் இந்த வலுவான பெட்டியின் பின்பகுதியில் உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டு இலகுவாக எதிரியைத் தாக்க முடியும். எதிரிகள் திருப்பி துப்பாக்கியால் சுட்டால்கூட குண்டுகள் துளைக்காத வகையில் இப் பெட்டிகள் மிகவும் உறுதிவாய்ந்தவை' என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை ரயில்கள் தாமதமாக இயக்கம்

என்ஜினீயா் வீட்டில் நகைகள் திருட்டு

11.4.1976: பொது பணத்தில் நிறுவிய பாலம், கல்வி சாலைகளின் தனியார் பெயர்களை நீக்க த.நா. அரசு முயற்சி

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் மாவட்டக் காவல் பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

