அறிவு தந்த மன்றங்கள்
இயற்கையை ஆராதிக்கும் ஆங்கிலக் கவிஞர் வேர்ட்ஸ் வொர்த் ஒரு முறை விருந்தினர் ஒருவருக்கு தம் வீட்டைச் சுற்றிக் காட்டியபோது நூலகத்திற்கு அழைத்துச் சென்றாராம். அங்கிருந்த நூல்களை எல்லாம் காட்டிவிட்டு, "இதுதான் என் நூலகம், ஆனால் என் படிப்பெல்லாம் இதற்கு வெளியிலேதான்' என்றாராம்.








