செம்மரம் கடத்த முயன்றதாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி ஆந்திர மாநிலம், சேஷாசலம் வனப் பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தமிழகத்தை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இச்சம்பவத்துக்கு பிறகும் ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் தமிழக எல்லைப் பகுதி மாவட்டங்களான தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் ஆகியவற்றின் மலைக் கிராமங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் ஆந்திர மாநிலப் போலீஸாரால் கைது செய்யப்படுவது தொடர்கிறது.
அண்மையில் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 32 பேரை விடுவிக்க தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ள நிலையில், செம்மர கடத்தல்காரர்களை கதாநாயகர்களாக்க வேண்டாம் என ஆந்திர வனத்துறை அமைச்சர் கோபாலகிருஷ்ண ரெட்டி கூறியுள்ளது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
ஆந்திர மாநிலம், சேஷாசலத்தில் வெட்டிக் கடத்தப்படுவது செம்மரம் அல்ல. இது தவறான தகவல் என்பது வனத் துறையினருக்கும், கடத்தல்காரர்களுக்கும், வேளாண் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் தெரியும். உண்மையில் சேஷாசலத்தில் வெட்டிக் கடத்தப்படுபவை செஞ்சந்தன மரங்கள் ஆகும்.
இதற்கு சந்தன வேங்கை என்ற பெயரும் உண்டு. ஃபாபேசியே தாவர குடும்பத்தைச் சேர்ந்த இதன் தாவரவியல் பெயர் "டெரோ கார்ப்பஸ் சான்ட்டாலினஸ்' (டற்ங்ழ்ர் இஹழ்ல்ன்ள் நஹய்ற்ஹப்ண்ய்ன்ள்).
இதைப்போலவே உள்ள "டெரோ கார்ப்பஸ் மாசுப்பியம்' என்ற தாவரப் பெயர் கொண்ட செம்மரத்தின் பெயரைப் பயன்படுத்தி அன்னிய செலாவணிக்காக நாட்டின் அரிய செல்வமான செஞ்சந்தன மரங்கள் கடத்தல்காரர்களாலும் வேறு சிலராலும் அழிக்கப்பட்டு வருகின்றன.
இம்மரங்கள் கிழக்கு மலைத் தொடருக்கு மட்டுமே உரியவை. மிகக் குறுகிய விரவல் பரப்புடன் ஆந்திர மாநிலத்தின் தெற்கில் நல்லமலை தெற்கு பகுதி, சேஷாசலம் மலை, நிகழ மலை, வெள்ளிகொண்டா மலை ஆகிய இடங்களில் அதிக அளவிலும், தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரளவு கணிசமான எண்ணிக்கையிலும் வளர்கின்றன.
இவை டன் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதன் தேவை அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வரும் நிலையில் சர்வதேச சந்தையில் இன்னும் விலையேறும் என்கிறார்கள்.
இவ்வளவு விலைக் கொடுத்து அந்த நாடுகள் வாங்குவதற்கு காரணம் என்ன?
உலகத்திலேயே அணுக்கதிர்களை தடுத்தும் நிறுத்தும் ஆற்றல் மிக்கவை இந்த வைரம் பாய்ந்த செஞ்சந்தன மரங்கள்.
அணுஉலைக் கூடங்களில் இருந்து அணுக்கதிர்கள் வெளியேறிவிடாமல் தடுப்பதற்கு இம்மரத்தையே பயன்படுத்துகிறார்கள் என்பதால் இதற்கு சர்வதேச சந்தையில் அதிக மதிப்பு.
ரத்த சந்தனம், செஞ்சந்தனம், உதிரச் சந்தனம் என்ற பெயர்களில் சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும், பழங்குடியினரின் மருத்துவத்திலும் இம்மரத்தின் சாந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, மருந்துப் பொருள்களில் மலட்டுத் தன்மை, புற்றுநோய், நீரிழிவு நோய் ஆகியவற்றிலும், ஐரோப்பிய நாடுகளில் மதுபானங்களுக்கு நிறமியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இம்மரத்தின் உள்பகுதி கருங்கல் போன்று மிகக் கடினமாக இருப்பதால் இவற்றை வெட்டுவது எளிதல்ல. இதனால்தான் மலைப் பகுதிகளில் மரங்களை வெட்டுவதற்கும், அவற்றை ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு எளிதில் எடுத்துச் செல்வதற்கும் நல்ல உடல்திறனுடன் கூடிய கூலித் தொழிலாளர்கள் கடத்தல்காரர்களுக்கு தேவைப்படுகின்றனர்.
இதற்காக வேலூர், திருவண்ணாமலை பகுதி ஜவ்வாது மலையில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் கடத்தல்காரர்களால் பணயம் வைக்கப்படுகின்றனர்.
மலைப் பகுதிகளில் போதிய வருவாய் இல்லாமை, விவசாய நிலங்கள் இல்லாமை போன்றவற்றாலும், மதுப்பழக்கத்துக்கு அடிமையானதாலும் அதிக வருவாய் கிட்டும் ஆபத்தான இத்தொழிலுக்கு இளம் வயதினர் மற்றும் நடுத்தர வயதுடைய கூலித் தொழிலாளர்கள் இடைத்தரகர்கள் மூலம் களம் இறக்கப்படுகின்றனர்.
இத்தகைய சூழலில் ஆபத்தான இத்தொழிலில் ஈடுபட முற்படும் மலைவாழ் கூலித் தொழிலாளர்களை மீட்கும் வகையில் அவர்களுக்கு மாற்றுத் தொழில் ஏற்படுத்துவது, அவர்களின் தனிப்பட்ட ஆற்றலை வளர்ச்சிப் பணிகளுக்கான மனித சக்தியாக மாற்றுவது, அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் நடைபெறும் கடினமான திட்டப் பணிகளில் ஓரளவு கட்டுப்படியாகும் கூலியை வழங்குவது போன்ற நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்திலும், ஆந்திர மாநிலத்திலும் அரசியல் செல்வாக்குடன் நடமாடும் கடத்தல்காரர்களையும், இடைத் தரகர்களையும் கைது செய்ய வேண்டும்.
அணுக்கதிர்களைத் தடுக்க வல்ல ஆற்றலுடைய செஞ்சந்தன மரங்களை உரிய வகையில் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். முதல் கட்டமாக இந்த மரங்களை நேரடியாகவோ, கடத்தல் மூலம் மறைமுகமாகவோ வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைத் தடுக்க வேண்டும்.
மருத்துவத்துக்காக பயன்படுத்துவதாக இருந்தாலும், அவை மதிப்பூட்டப்பட்ட மருந்து பொருள்களாக மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட
வேண்டும்.
இத்தகைய நடவடிக்கைகள் மூலம் அப்பாவித்தனமாக ஏமாறும் ஏழை கூலித் தொழிலாளர்கள் சித்திரவதைக்குள்ளாவதையும், நாட்டின் அரிய வளம் ஏற்றுமதி என்ற பெயரால் கொள்ளைப்போவதையும் தடுக்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வணிகக் கப்பல்களில் பணிபுரியச் செல்லும் இந்தியர்களுக்கு வெளியுறவுத் துறை அறிவுரை!

கார்கில் போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!

சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளர்கள் 3 பேர் பலி

லவ் ஓ லவ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


