உடல்நலத்தைப்போல, மனநலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நாம் உடல் நலத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மன நலனுக்குக் கொடுக்காததால் நாட்டில் மன நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடி வருகிறது.
இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 10-15% பேர் மன நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 65 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
உடலுக்கு பாதிப்பு ஏற்படுவதைப்போல, மனதுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. இதை மனநலப் பிரச்னை என்று அழைக்கலாம். ஒருவரின் உணர்வுகள், எண்ணங்கள் அல்லது நடத்தை ஆகியவற்றைப் பாதித்து அவருடைய வாழ்க்கையிலோ அல்லது அவருடைய குடும்பத்தினரின் வாழ்க்கையிலோ எதிர்மறை பாதிப்பை விளைவிக்கும் விதத்தில் ஒருவர் அனுபவிக்கும் நலமின்மையே மனநலப் பிரச்னை ஆகும்.
பெரும்பான்மையான மனநலப் பிரச்னை உள்ளவர்கள் சராசரி புறத்தோற்றத்தில் வெளியில் தெரிவதில்லை. மனச்சோர்வு, பதற்றம், பாலுறவு சார்ந்த பிரச்னைகள், போதைப் பழக்கம் ஆகியவையும் மனநலப் பிரச்னைகளில் அடங்கும்.
கடுமையான மனநலப் பிரச்னைகள் உள்ளவர்களை மனநோய் உள்ளவர் என்று குறிப்பிடலாம். மனநல பிரச்னையை ஐந்து முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம்.
உடல் சார்ந்த நோய்க்குறிகளான வலி, களைப்பு, சோர்வு, எடைக் குறைவு, ஜீரணகோளாறு, பசியின்மை, தூக்கமின்மை ஆகியவற்றோடு உடலையும் உடலின் செயல்பாடுகளையும் பாதிக்கும்.
உணர்வு சார்ந்த நோய்க்குறிகள் சோகம், வருத்தம், குற்றவுணர்வு, அடிக்கடி அழுதல், தன்னம்பிக்கையின்மை, பயத்தோடு இருத்தல்.
அறிதிறன் (சிந்தனை) நோய்க்குறிகள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம், தெளிவாகச் சிந்திக்க இயலாமை, குழப்பமாக இருத்தல், ஞாபக மறதி, அதிகமாக சந்தேகப்படுதல் போன்றவையாகும்.
நடத்தை நோய்க்குறிகளான, மூர்க்கமாக நடந்து கொள்ளுதல், அடிக்கடி கோபம் கொள்ளுதல், தற்கொலைக்கு முயற்சி செய்தல் ஆகியவை.
புலன்சார் நோய்க்குறிகளான விபரீத கற்பனை, மாயக்குரல் கேட்டல், தனக்குத்தானே பேசிக்கொள்ளல் - சிரித்துக்கொள்ளல், அனைவரும் தன்னைப்பற்றியே பேசியதாக உணர்வு, கண்களுக்குத் தெரியாத காட்சிகளைக் காண்பதாக உணர்வு போன்றவையாகும்.
உண்மையில் இந்த நோய்க்குறிகள் வெவ்வேறாக வெளிப்பட்டாலும், அனைத்தும் ஒன்றொடு ஒன்று தொடர்புடையன. உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காத மனநலப் பிரச்னை உள்ளவர்களை புறக்கணிக்கப்படுதல், சமூகத்தில் ஓரங்கட்டப்படுதல் போன்ற செயல்பாடுகளால் நோயின்தாக்கம் அதிகரிக்கிறது.
மனநலப் பிரச்னை உள்ளவர்களை பைத்தியகாரன், லூசு என்றும் சொல்லி ஒதுக்குவதும், உறவினர் என்று சொல்லக் கூச்சப்படுவதும் இன்றளவு நடைமுறையில் உள்ளது.
கடுமையான மனநோய்களாக மூன்றைக் குறிப்பிடலாம். மனச்சிதைவு, தீவிர மனவெழுச்சி பிறழ்வு மற்றும் திடீர் மனப் பிறழ்வு. இந்த மனநோய்கள் அரிதாகவே ஒருவரைப் பாதிக்கும். மனநலப் பிரச்னைகளுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
மன அழுத்தத்தை உருவாக்கும் வாழ்க்கை நிகழ்வுகள், கடினமான வாழ்க்கைப் பின்னணி, மூளை நோய்கள், பாரம்பரியம் அல்லது மரபணுக்கள், மருத்துவப் பிரச்னைகள் குறிப்பாக சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்பு போன்ற உடல்நலக் கேடுகள் கடும் மனநலப் பிரச்னைகளுக்குக் காரணமாக அமைய
லாம்.
பெரும்பாலான மனநலப் பிரச்னைகளை எளிதில் குணப்படுத்தலாம். அதற்கு கீழ்கண்ட சிகிச்சை முறைகள் உதவும்.
மனநலப் பிரச்னைகளின் காரணங்களைக் கண்டறிந்து அவற்றை ஆரம்பத்திலேயே தடுத்தால் பல்லாயிரக்கணக்கான மக்களை மனநலப் பிரச்னைகளிருந்து காப்பாற்ற முடியும்.
ஆண்டுதோறும் அக்டோபர் 10-ஆம் தேதி உலக மனநல தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. 1992-ஆம் ஆண்டு முதல் உலக மனநல மருத்துவக் கூட்டமைப்பால் உலக மனநல தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மாண்புடன் மனநலம் அனைவருக்கும் மனநல முதலுதவி (ஈண்ஞ்ய்ண்ற்ஹ் ண்ய் ஙங்ய்ற்ஹப் ஏங்ஹப்ற்ட்) என்பது 2016-ஆம் ஆண்டின் உலக மனநல தினத்தின் மையக் கருத்தாகும்.
உலகம் முழுவதும் சுமார் 45 கோடி மக்கள் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் 2020-இல் 20 விழுக்காடு இந்திய மக்கள் ஏதோ ஒரு மனநலப் பிரச்னைக்கு உள்ளாவார்கள் என்று கணித்துள்ளது.
பொதுமக்கள் மனநலப் பிரச்னை உடையவரை ஏற்றுக்கொள்ளுதல் (அஸ்ரீஸ்ரீங்ல்ற்ஹய்ஸ்ரீங்), அனுசரித்தல் (அக்த்ன்ள்ற்) மற்றும் பாராட்டுதல் (அல்ல்ழ்ங்ஸ்ரீண்ஹற்ங்) செய்ய வேண்டும். இந்தியாவில் லட்சம் பேருக்கு ஒரு மனநல மருத்துவர் இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
நம் நாட்டில் மொத்தம் 6 ஆயிரம் மனநல மருத்துவர்கள் மட்டும்தான் இருக்கின்றனர். இந்தியாவை ஒப்பிடும்பொழுது மேலைநாடுகளில் 5 ஆயிரம் பேருக்கு ஒரு மனநல மருத்துவர் இருக்கின்றனர். மனநலம் சார்ந்த குறைபாடுகள் சமூகத்தில்
புரிதல் இல்லாததால் சிகிச்சை பெறு
வோரும் தயங்குகின்றனர்.
மனநலச் சேவைக்கு சமுதாயம் சார்ந்த பயிற்சி பெற்ற களப்பணியாளர்கள் உருவாக்க வேண்டும் என்று "தேசிய மனநலக் கொள்கை 2012' வலியுறுத்துகிறது.
மனநோயின் தன்மை, முழுமையாக அறிந்து கொள்ளுதல், தொடர்ந்து மருந்துகள் உட்கொள்ளுதல், குடும்பத்தார் மற்றும் உறவினரின் அன்பு, அரவணைப்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம்
மனநோயாளிகளை எளிதில் குணப்படுத்தலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முட்டாள்களே...! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானை மிரட்டும் டிரம்ப்!
பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
இயக்குநராகும் பிரபல இயக்குநரின் மனைவி! படப்பிடிப்பைத் துவங்கி வைத்த சூர்யா!

திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

