இயற்கை நமக்கு அளித்த செல்வங்களை அழித்து விட்டு, இப்போது அதன் தேவையை உணர்ந்து நாம் தேடி அலைகிறோம். சாலைகள் விரிவாக்கம், நகரமயமாதல், வீட்டு வசதி போன்ற காரணங்களால் நாம் நிழல் தரும் மரங்களை கொஞ்சங்கொஞ்சமாக இழந்து வருகிறோம்.
மரங்கள் நமக்கு இயற்கை கொடுத்த வரங்கள். மரம் வேர் முதல் கிளை வரை பல பயன்களை மனிதக் குலத்திற்கு தந்து உதவுகிறது. மரம் நிழலை தந்து இளைப்பாறவும், மண்ணை குளிர வைக்கவும், குளிர்ந்த காற்றை வீசி மழையைப் பொழிய வைக்கவும், மடிந்து சாய்ந்தப் பிறகு விறகாகி அடுப்பெரிக்கவும் பயன்படுகிறது.
இவ்வாறு மனிதர்களுக்கு பல்வேறு பயன்களைத் தரும் ஆக்சிஜன் தொழிற்சாலைகளான மரங்களை அழிக்கக் கூடாது என இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து அறிவுறுத்தியதன் பயனாக இப்போது ஆங்காங்கே மரங்கள் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒரு புறம் மரங்கள் வெட்டப்பட்டால், இன்னொரு புறம் இருக்கும் மரத்தில் ஆணி அடித்து விளம்பர பலகைகள் வைத்து மரங்கள் சேதப்படுத்தடுகின்றன. சிறு துரும்பு பட்டாலே துடிக்கும் நாம், மண்ணில் வேரூன்றி நிற்கும் மரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை உணராதது ஏனோ?
பெருகி வரும் தொழில் போட்டி காரணமாக சில சிறு குறு தனியார் நிறுவனங்கள், மதப் பிரசாரம் செய்பவர்கள், கல்வி நிலையங்கள், தொழில் கல்விக்கான பயிற்சி நிலையங்கள், சித்த, ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை மருத்துவமனைகள், யோகா வகுப்புகள் போன்றவை குறித்த விளம்பரப் பதாகைகள், தட்டிகள் ஆகியவைகளை மரங்களில் ஆணிகளை அடித்து தொங்க விட்டு விளம்பரங்களைத் தாங்கும் சுவர்களாக மரங்களை மாற்றி அநாகரிக செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விளம்பரங்கள் செய்ய இந்த உலகில் எவ்வளவு வழிகள் இருந்தாலும், சுலபமாக மரங்களில் ஆணியை அடித்து அதில் விளம்பர பலகையை மாட்டிச் செல்வது என்பது இப்போது நவீன விளம்பர உத்திகளுள் ஒன்றாகி விட்டது. பணம் காய்க்கும் மரங்கள் இன்று விளம்பரங்களை சுமந்து வாடுகின்றன.
பேருந்து நிறுத்தங்கள், இரயில் நிலையங்கள் அருகில் உள்ள மரங்கள் பல துன்பங்களைத் தாங்கி விளம்பரங்களைத் தாங்கி நிற்கின்றன. சாலையிலுள்ள மரங்களை வெட்டுவது சட்டப்படி குற்றம் என்றால் அவற்றை சேதப்படுத்துவதும் குற்றமாகவே கருதப்பட வேண்டும்.
ஒரே மரத்தில் பல விளம்பரங்களை ஒருங்கே வைக்கிறார்கள். மர நிழலில் பூக்களை விற்போர், தனக்கு மரம் தரும் நிழலையும், ஆக்சிஜனையும் மறந்து அதில் ஆணிகளை அடித்து பூ மாலைகளைத் தொங்க விட்டு வியாபாரம் செய்கிறார்கள்.
மரங்களில் ஆணி அடிப்பதால், அதிலுள்ள குழாய்கள் பாதிக்கப்பட்டு நீர் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அடுத்தடுத்து ஆணிகளை அடிப்பதால், பால் வடிந்து அந்த இடத்தில் மரப்பட்டைகள் உதிர்ந்து போய் மரத்திலுள்ள நீர்ச்சத்து ஆவியாகி வீரியம் குறைந்து, வளர்ச்சி குன்றி இறுதியில் பட்டுபோய் விடுகின்றன.
இது குறித்து உயிரியல் பேராசிரியர் ஒருவரிடம் கேட்ட போது, மழை பெய்வதற்கு காரணமான மரங்களை நமது உயிரைப்போல கருத வேண்டும். மரங்களில் ஆணி அடிப்பதால் நுண்ணுயிர் தொற்று அதிகமாகி மரம் பட்டுப் போகும். மரங்களில் இருக்கும் உணவுக் குழாய்களில் ஓட்டை விழுந்து மரத்தின் வளர்ச்சி தடைபடும். பக்கவாட்டில் கிளைகள் வளராமல் பட்டு விடும்.
ஆணிகள் அடிக்கும்போது அதனுடைய இரும்பு துகள்களால் மரத்தின் நுண் திசுக்கள் பாதிக்கப்பட்டு மரம் பட்டுவிடும். மரத்தின் மேல் பட்டைக்கு அடியில் ஒரு அடுக்கு இருக்கும்.
அந்த அடுக்குக்கு கீழே நோய்த் தொற்று ஏற்பட்டு மரம் அழியும். இந்த விழிப்புணர்வு இல்லாமல் இரும்பு ஆணிகள் அடிப்பவர்கள் மரத்தின் இறப்புக்கு காரணமாகிறார்கள் என்று வருத்ததுடன் தெரிவித்தார்.
மரங்களில் ஆணி அடித்து விளம்பர பலகைகளை பொருத்துவதால், மரங்கள் சேதமடைவதோடு, அதன் ஆயுட்காலமும் குறைவதாக இயற்கை ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர்.
மரங்களில் ஆணி அடித்து தங்கள் நிறுவனங்களின் விளம்பர பலகைகளை மாட்டுவதை தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு விளம்பர நிறுவனங்களிடமும் ஏற்பட வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
தமிழகத்தில் சில அமைப்புகள் மரங்களில் தொங்கவிடப்படும் விளம்பரங்களை அகற்றி, ஆணிகளையும் பிடுங்கி மரங்களுக்குப் புத்துயிர் அளிக்கிறார்கள். இவர்களின் பணி பாராட்டத்தக்கது.
சாலையோர மரங்கள் மீது ஆணி அடித்து விளம்பர பதாகைகளைத் தொங்க விடும் இயற்கை அழிப்பாளர்களைக் கண்டறிந்து அபராதம் விதிப்பபோடு, புதிய மரக்கன்றுகளை அங்கேயே நட்டு பராமரிக்கவும் அரசு அறிவுறுத்த வேண்டும்.
கர்நாடகம், கேரளாவில் மரங்களில் ஆணி அடிக்க தடை உள்ளது. ஆணி அடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் கேட்டபோது மரங்களில் ஆணி அடித்தால் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு வழக்குப் பதிவு செய்ய சட்டத்தில் இடமிருக்கிறது என்றார்.
அக்கால மக்கள் மரங்களை தம் குடும்பத்தில் ஒருவராக மதித்தார்கள். இன்றும் சில மரங்களை தெய்வமாக வழிபடுகிறார்கள். ஒரு மரம் வளர்ந்தால் அதன் மூலம் இந்த பூமி பல வகைகளில் பயன் பெறுவதோடு, புழு, பூச்சி, பறவை, மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் பல்வேறு பயன்களைப் பெறுகிறார்கள்.
எனவே, வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய இராமலிங்க சுவாமிகள் பிறந்த இப்புண்ணிய பூமியில் மரங்களின் மீது ஆணிகள் அறையாமல், அவற்றைக் காப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!

விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை! - சரத்குமார் சிறப்பு நேர்காணல்!

தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?

சாம்சங் போராட்டத்தில் இ. முத்துக்குமார் பொய்வழக்குகளில் தொடர்ந்து சிறையில் அடைப்பு! சிபிஐஎம் கண்டனம்!!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

