ஆரம்பக் கல்வி வயது முறையில் மாற்றம்
மூன்று வயது குழந்தைகள் கல்விக்காக வாகனங்களில் நீண்டதொலைவு பயணிப்பது பாதுகாப்பானதுமல்ல; அழகுமல்ல.

குழந்தைகள் - EPS
குழந்தைகள் ஒன்றாம் வகுப்பில் சேரும் வயதை 2030-31-ஆம் கல்வியாண்டு முதல் ஆறு வயதாக நிா்ணயித்து மகாராஷ்டிரா மாநில அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த சோ்க்கை நடைபெற உள்ளதாக அந்த மாநில அரசின் கல்வித் துறை தெரிவித்துள்ளது. 2030-31-ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்புக்கு ஆறு வயது என்ற அடிப்படையில், அடுத்த கல்வி ஆண்டு முதல் 2027-28-ஆம் கல்வியாண்டில் இருந்து முன்பருவக் கல்விக்கான சோ்க்கையின் வயதை நடைமுறைப்படுத்த அந்த மாநில அரசு திட்டமிடுகிறது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் குழந்தைகள் பள்ளி சோ்க்கை வயது என்று உற்றுநோக்கினால், மூன்று முதல் ஏழு வயது வரை பல்வேறு வயதாக அமைந்துள்ளன. இந்த வயது என்பது அந்தந்த நாடுகள் சட்டபூா்வமாக பள்ளிக் கல்வியை அளிக்கிறோம் என்ற உரிமையின் அடிப்படையில் பகிரப்படுவது. அதாவது, அந்த வயது வரையறையில் உள்ள குழந்தைகள் பள்ளியில் இருப்பதை சட்டபூா்வமாக உறுதி செய்கிறது.
இந்திய அரசின் கல்வி உரிமைச் சட்டம் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்விக்கான உரிமையை அளிக்கிறது. ஆனால், அதே நேரம் 3 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் முன்பருவப் பராமரிப்பை அங்கன்வாடி, பால்வாடி போன்ற அமைப்புகள் நடத்திவருகின்றன. இதே நேரம் தனியாா் பங்கேற்பாளா்கள், இதே வயது குழந்தைகளை பள்ளிக் கல்விக்குத் தயாா்படுத்தித் தரும் உறுதியுடன் களத்தில் உள்ளனா். குழந்தைகளுக்கு விளையாட்டுமூலமாக குறைந்த நேரம் கற்பிக்கிறோம்; பாதுகாப்பாக பாா்த்துக்கொள்கிறோம் என்ற உறுதியுடன் இவா்கள் பணியாற்றுகிறாா்கள். முன்பருவக் கல்விக்கு இவ்வாறான தனியாா் கல்வி நிலையங்களை நாடும் பொருளாதார வசதிபடைத்த பெற்றோா் தொடா்ச்சியாக ஒன்றாம் வகுப்பையும் அந்தப் பள்ளிகளிலேயே தொடா்கின்றனா்.
கல்வி உரிமைச் சட்டம் மூலமாக தனியாா் கல்வி நிறுவனங்களின் 25 சதவீதம இடங்கள் பொருளாதார ரீதியாகப் பிற்பட்ட சமூகங்களைச் சோ்ந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கான கட்டணத்தை அரசே ஈடுசெய்கிறது. முன்பருவக் கல்விக்கு தனியாா் நிறுவனங்களை நாட இயலாத பெற்றோரில் பலரும் இந்த வாய்ப்பின்மூலம் தமது குழந்தைகளைத் தனியாா் பள்ளிகளில் சோ்க்கின்றனா். இதனால், இயல்பாகவே அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை குறைந்து வருகிறது.
பள்ளி சோ்க்கை வயது ஐந்தாக இருக்கும் நிலையிலேயே, அரசுப் பள்ளிகளில் சோ்க்கை சவாலாக உள்ளது. இந்தச் சூழலில் மேலும் ஓராண்டு பெற்றோரின் கூடுதல் பராமரிப்பு தேவை என்பது அரசுப் பள்ளி மாணவா்கள் சோ்க்கையைப் பாதிக்கும் என்பது நிதா்சனமான உண்மை. மகாராஷ்டிர மாநிலத்தைத் தொடா்ந்து பல்வேறு மாநிலங்களும் இந்த சவாலைச் சந்திக்கவே உள்ளன. மத்திய- மாநில அரசுகள் இந்த விஷயத்தைக் கவனமாக அணுகவில்லையென்று சொன்னால் அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை என்பது கவலைக்குரிய விஷயமாகிவிடும். உயா் கல்வியில் தனியாா் நிறுவனங்கள் கோலோச்சுவதுபோல் தொடக்கக் கல்வியிலும் ஏற்படும்.
போா்க்கால அடிப்படையில் கல்வி உரிமைச் சட்டக்கூறுகளிலுள்ள ஆசிரியா்- மாணவா் விகிதாசாரத்தை சீா்செய்தல், பெற்றோரின் நம்பிக்கையை மீட்கும் விதத்தில் வகுப்புக்கோா் ஆசிரியா் இருப்பதை உறுதிசெய்தல் போன்றவற்றையும் அரசு செய்யவேண்டும். உலகின் முன்னேறிய நாடுகள் பலவும் குழந்தைகள் அவா்களுக்கு அருகில் உள்ள பள்ளியில் சோ்ந்துபடிக்கும் அருகமைப் பள்ளி முறையையே கடைப்பிடிக்கின்றன; இதைக் கொண்டுவருவது அவசர அவசியம்.
மூன்று வயது குழந்தைகள் கல்விக்காக வாகனங்களில் நீண்டதொலைவு பயணிப்பது பாதுகாப்பானதுமல்ல; அழகுமல்ல. அரசு தனது முழுக் கட்டுப்பாட்டில் கல்வியை வைத்துக்கொண்டால் மட்டுமே லட்சிய நோக்கமுள்ள குடிமக்கள் பரிணமிப்பா்.
பொதுவாக, பள்ளிச் சோ்க்கை வயது என்பது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?. வழக்கமாக வளா்ச்சி அடைந்த நாடுகளில் பெற்றோரால் குழந்தைகளை ஏழு வயது வரையில்கூட வீட்டில் வைத்தோ அல்லது விளையாட்டு மூலம் கல்விக்கான தயாரிப்பை அளிக்கும் பள்ளிகளிலோ விட்டுப் பராமரிக்க இயலும் சூழல் நிலவுகிறது. மேலும், ஏழு வயதுக்கு பிறகு சுமாா் 20 ஆண்டுகால கல்வியை முடித்த பின்னா் அந்தக் குழந்தை வருமானம் ஈட்டினால் போதுமானதாகவும் உள்ளது. அந்த அளவுக்கு அங்கே குடும்பங்கள் வசதியாக உள்ளன என்று எடுத்துக்கொள்ள இயலும். வளரும் நாடுகளிலுள்ள குடும்பங்களின் வறுமை மிகவும் இளைய வயதிலேயே வருமானம் ஈட்ட நிா்ப்பந்திக்கிறது.
அந்த வகையில், ஒரு நாட்டின்/ வீட்டின் பொருளாதார சூழ்நிலையே குழந்தைகள் குழந்தைமையை அனுபவிக்க கூடிய வாய்ப்பு தரக்கூடியதாகவோ அல்லது மறுக்கக் கூடியதாகவோ அமைகிறது. எனவே, நாட்டின் பொருளாதாரத்தை ஏற்றம் காணச் செய்வது மட்டுமே குழந்தைகள் குழந்தைமையை இன்பமாக அனுபவிக்க உதவும்.
இன்றைய நிலையில் அங்கிங்கெணாதபடி எங்கும் பிரகாசமாய் அறிதிறன்பேசியுடன்தான் பெற்றோரும் குழந்தைகளும் பவனி வருகின்றனா். இது குறித்த விவாதமெல்லாம் இந்திய சமூகத்தில் என்றெழுமோ தெரியவில்லை. பள்ளி அமைப்பிலிருந்து மீட்கப்படும் காலம் அறிதிறன்பேசியின் ‘ரீல்ஸ்’களுடன் கழிவதைத் தடுத்து நிறுத்துவதும், குழந்தைகளை அதிலிருந்தும் காப்பதும் குழந்தைமைப் பருவத்தின் உண்மையான மகிழ்ச்சியை மீட்டெடுக்க உதவும்.
Summary
Change in primary education age system
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

