உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்பணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா கீமோதெரபி ஊசி ரூ. 7000; புற்றுநோய் மருந்துகளின் புதிய விலைப் பட்டியல்!செஞ்சி சிறுமி வழக்கு; புலன் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்: பெ. சண்முகம்வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலையில் மக்கள்; இதுதான் தவெகவின் சாதனையா? - மு.க. ஸ்டாலின்இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? - கனிமொழி கேள்விதேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!

சிறைத் துறையினர் விழிக்க வேண்டிய நேரம்!

தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் ஒரே தப்பியோடிய சம்பவம் பற்றிய நடுப்பக்கக் கட்டுரை......

தப்பியோடிய கைதிகள்.

Updated On :

பொ. ஜெயச்சந்திரன்

தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்டச் சிறையில் இருந்து 17 விசாரணைக் கைதிகள் ஒரே நேரத்தில் தப்பியோடிய சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அக்டோபர் 26-ஆம் தேதி இரவு நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறி காவலர்களை அறைக்குள் வரவழைத்து, அவர்களைத் தாக்கிவிட்டு கைதிகள் தப்பியதாக தெரிகிறது. தப்பிய அனைவரும் பிடிபட்டனர்.

தமிழக சிறைகளுக்கு என்று பல சிறப்புகள் உண்டு; அதில் முக்கியமாக, சென்னை மத்திய சிறை. நம் நாட்டில் கட்டப்பட்ட பழைமையான சிறைகளில் ஒன்றாகும். 1837-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் "மெட்ராஸ் பெனிடென்ஷியரி' என்ற பெயரில் தொடங்கப்பட்டது. வேலூர் மத்தியச் சிறை பிரிட்டிஷாரால், 1830-ஆம் ஆண்டு பெண்களுக்காகக் கட்டப்பட்டது. வேலூர் தொரப்பாடியில் ஆண்கள் மத்திய சிறை கடந்த 1867-ஆம் ஆண்டு சுமார் 153 ஏக்கர் பரப்பளவுடன், வட்ட வடிவில்7 தொகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் உயர் கண்காணிப்பு கோபுரத்துடன் கட்டப்பட்டது. இங்கு, ஒரே நேரத்தில் 2,100 கைதிகளை அடைத்து வைக்க முடியும்.

கோவை மத்திய சிறை 1872-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த சிறை தற்போது ஆக்கிரமித்துள்ள பரப்பளவு 167.76 ஏக்கர். இந்த சிறையின் அங்கீகரிக்கப்பட்ட தங்குமிடங்கள் 2,208. சுதந்திரப் போராட்டத்தின்போது 09.07.1908 முதல் 01.12.1910 வரை வ.உ.சிதம்பரம் பிள்ளை இந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடலூர் மத்திய சிறை 1865-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த சிறை முதலில் மன வளர்ச்சி குன்றிய கைதிகளை தங்க வைப்பதற்காக பயன்படுத்தப்பட்டு, பின்னர்

1986-ஆம் ஆண்டு பழக்கவழக்க சிறைக் குற்றவாளிகளுக்கான சிறை என மறுவகைப்படுத்தப்பட்டது.1996-ஆம் ஆண்டு சாதாரண சிறையாக மாற்றப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தின்போது, மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 20.11.1918 முதல் 14.12.1918 வரை இந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

பாளையங்கோட்டை மத்திய சிறை 1880-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1929-ஆம் ஆண்டு வரை மாவட்ட சிறையாக செயல்பட்டது. 1929-ஆம் ஆண்டு போர்ஸ்டல் பள்ளியாக மாற்றப்பட்டது. மாணவர் சேர்க்கை குறைவாக இருந்ததால், போர்ஸ்டல் பள்ளி, புதுக்கோட்டை மாவட்ட சிறை வளாகத்துக்கு மாற்றப்பட்டது. தற்போதைய வளாகம் 1.4.68 முதல் மத்திய சிறையாக செயல்பட்டு வருகிறது. 117.75 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

சேலம் மத்திய சிறை 1862-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1934-ஆம் ஆண்டு வாலிப கைதிகளை தங்க வைப்பதற்காக சிறை இணைப்பு கட்டப்பட்டது. இந்த சிறையின் பரப்பளவு 113.19 ஏக்கர்.

அங்கீகரிக்கப்பட்ட தங்குமிடம் 1,431. இந்தச் சிறையின் கட்டடக் கலை வடிவமைப்பு தாமரை இதழ்கள் போன்ற வட்ட வடிவில் உள்ளது. அனைத்து செல்களும் ஒரு மையப் புள்ளியை உள்நோக்கி எதிர்கொள்ளும்.

தேக்கம்பட்டி சிறைக்குள் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் எத்தனை பேர்?, கைதிகளைக் கண்காணிக்கும் நடைமுறைகள் என்ன?, அறைகளின் கண்காணிப்பு எவ்வாறு நடைபெறுகிறது, கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் இருந்தனவா?, காவலர்களின் பணிப் பிரிவு எப்படி இருந்தது? ஒரு கைதி உடல்நலக் குறைவு என்று கூறும்போது, மருத்துவ அவசரநிலையைக் கையாள்வதற்கான பாதுகாப்பு நடைமுறை என்ன?- இவை அனைத்துக்கும் தெளிவான பதில் தேவை.

சிறையின் உயர்ந்த சுவர் வெளியில் இருந்து பார்த்தால், பாதுகாப்பின் அடையாளமாகத் தெரியும். ஆனால், அந்தச் சுவருக்குள் மனிதர்களின் வாழ்க்கை இருக்கிறது. ஒருபுறம், தப்பிச் செல்ல முயற்சிக்கும் கைதிகளைத் தடுக்க வேண்டிய கடமை. மறுபுறம், சட்டப்படி அவர்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு. ஒருபுறம் சிறையின் ஒழுங்கு; மறுபுறம் மனிதநேயம். இந்த இரண்டையும் சமநிலைப்படுத்துவதே சிறைக் காவலர்களின் கடினமான பணியாகும்.

காலையில் கைதிகள் எழும் நேரத்திலிருந்து, இரவு சிறை மூடப்படும் நேரம் வரை கண்காணிப்பு. உணவு, மருத்துவம், நீதிமன்ற ஆஜர், சந்திப்பு என கைதிகளின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் பாதுகாப்பையும், ஒழுங்கையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு சிறைத்துறையினருக்கு உள்ளது.

சிறைக் காவலரின் பணி சாதாரணமானது அல்ல. அது விழிப்பின், பொறுப்பின், பொறுமையின் பணி. ஒரு கணம் கவனம் குறைந்தாலும், அதன் விளைவு பலரையும் பாதிக்கக் கூடியது. காவலரின் கண் இமைக்கலாம். ஆனால், பாதுகாப்பின் கண் இமைக்கக் கூடாது. அவர்கள் அணியும் சீருடை ஒரு பொறுப்பை நினைவூட்டுகிறது. அந்தச் சீருடையின் ஒவ்வொரு பகுதியிலும், மக்கள் பாதுகாப்பின் நம்பிக்கை இருக்கிறது. சிறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. ஆனால், கேமரா இருப்பதும், கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிப்பு நடைபெறுவதும் இரு வேறு விஷயங்கள். ஆனால் அவசரநிலையில் முடிவு எடுக்க வேண்டியது மனிதன்தான். தொழில்நுட்பம் துணையாக இருக்கலாம்; ஆனால், மனித விழிப்புணர்வுக்கு மாற்றாக இருக்க முடியாது.

சிறை என்பது சமுதாயத்தின் இருண்ட வாழ்க்கை வாழும் இடம் மட்டுமல்ல.

தவறிழைத்த மனிதன் தனது தவறை உணர்ந்து, கல்வியையும் தொழிலையும் கற்று, மனதை மாற்றிக் கொண்டு, மீண்டும் சமூகத்தில் நல்ல வாழ்க்கையைத் தொடங்குவதற்கான பாடசாலை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு சம்பவம் நடந்த பிறகு, தப்பி ஓடியவர்களைத் தேடுவது காவல் துறையின் கடமை. ஆனால், குற்றவாளிகள் தப்பிச் செல்லும் வாய்ப்பை குறைப்பது நிர்வாகத்தின் கடமை. பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டறிந்து சரி செய்வதே சிறந்த நிர்வாகம். ஆகவே, சிறைத் துறையினர் விழிக்க வேண்டிய நேரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.