புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

2-ஆவது மெட்ரோ ரயில் ஆகஸ்டில் சென்னை வருகை

சென்னை மெட்ரோ ரயில் சேவைக்காக பிரேசிலில் இருந்து 2-வது ரயில் ஆகஸ்ட் மாதம் சென்னை வரவுள்ளதாக மெட்ரோ ரயில்

News image
Updated On :17 ஜூன் 2013, 10:55 pm

சென்னை மெட்ரோ ரயில் சேவைக்காக பிரேசிலில் இருந்து 2-வது ரயில் ஆகஸ்ட் மாதம் சென்னை வரவுள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்தாண்டு இறுதிக்குள்ள 32 பெட்டிகள் அடங்கிய 8 ரயில்களும் பிரேசிலில் இருந்து சென்னைக்கு வந்தடையும் எனவும் கூறப்படுகிறது.

பிரேசில் நாட்டின் லாபா நகரில் தயாரிக்கப்பட்டு வரும் சென்னை மெட்ரோ ரயிலின் 4 பெட்டிகள் அடங்கிய முதல் ரயில், கப்பல் மூலம் மே 31-ஆம் தேதி சென்னை துறைமுகத்துக்கு வந்தடைந்தது.

துறைமுகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மெட்ரோ ரயில் பெட்டிகள் கோயம்பேடு பணிமனையில், தாற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

2வது ரயில் தயார்: இப்போது பிரேசிலில் 2-வது ரயிலும் தயார் நிலையில் இருப்பதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் ஒவ்வொரு முறையும் சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்த பிறகே, ரயில் பெட்டிகளை கப்பலேற்ற அனுமதி வழங்கப்படும்.

இப்போது 4 பெட்டிகள் அடங்கிய 2-வது ரயில் ஆகஸ்ட் மாதம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வரும் டிசம்பர் மாதத்துக்குள் 9 ரெயில்களும் சென்னை வந்து சேரும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மீதமுள்ள வேலைகள்: பிரேசில் நாட்டின் லாபா நகரில் மீதமுள்ள ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கான வேலைகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதில் 3-வது ரயிலில் 91 சதவீத மின் பணிகள் முடிவடைந்துள்ளன.

மேலும் பெட்டியின் வடிவமைப்பு பணிகளும் 75 சதவீதம் முடிவடைந்துள்ளன.

4,5,6-வது ரயில்களின் பெட்டிகள் தயாரிப்புப் பணிகளும் முடிவடைந்து, உள் அலங்கார வேலைகள் ஆரம்பகட்டத்தை எட்டியுள்ளன. மேலும் 7,8,9-வது ரயில்களின் பெட்டிகள் தயாரிப்புப் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.

சோதனை ஓட்டம்: சென்னை மெட்ரோ ரயிலுக்கான சோதனை ஓட்டம் முதல்கட்டமாக கோயம்பேடு பணிமனையில் மேற்கொள்ளப்படும். இதற்காக தண்டவாளங்கள் அமைக்கும் பணிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் துரிதப்படுத்தியுள்ளது.

இந்தப் பணிகள் ஜூலை 15-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணிமனையில் மின் பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளன.

மின் பணிகள் முடிந்தால் மட்டுமே கோயம்பேடு பணிமனையில் மெட்ரோ ரயிலுக்கான சோதனை ஓட்டத்தை நடத்த முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.