காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. இதில் காவிரி நீரை ஒழுங்குமுறைப்படுத்த ஒரு திட்டத்தை மத்திய அரசு 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மத்திய அரசு செயல்படுகிறது. தேர்தலுக்காக காவிரி வாரியத்தை அமைப்பதை நிறுத்த வேண்டியதில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளபோது, உச்சநீதிமன்றம் கொடுத்த காலக்கெடு முடிந்துள்ள நிலையிலும் மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு முடிவும் அறிவிக்கப்படாமல் உள்ளது.
இதன் மூலம் மத்திய அரசு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எங்கள் சாதனையை நாங்களே முறியடிக்கும் வகையில் ஆட்சியை அமைப்போம்: ராணிப்பேட்டையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஏழுமலையானுக்கு ரூ.1.01 கோடி நன்கொடை

பொள்ளாச்சி அருகே பெண்ணை தாக்கியதாக திமுகவினர் மீது புகார்

திருப்பத்தூரில் திடீா் மின் தடை: பொதுமக்கள் அவதி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


