இளவரசர் ஹாரியை மணந்த பிறகு மேகன் செய்யக் கூடாத 10 விஷயங்கள்: கொஞ்சம் டெரராகத்தான் இருக்கு

இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் திருமணம் வெகு விமரிசையாக நாளை நடைபெற உள்ளது. இதற்காக அரண்மனையே விழாக் கோலம் பூண்டுள்ளது.
இளவரசர் ஹாரியை மணந்த பிறகு மேகன் செய்யக் கூடாத 10 விஷயங்கள்: கொஞ்சம் டெரராகத்தான் இருக்கு

இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் திருமணம் வெகு விமரிசையாக நாளை நடைபெற உள்ளது. இதற்காக அரண்மனையே விழாக் கோலம் பூண்டுள்ளது.

உலகத் தலைவர்கள் பலரும் இதில் பங்கேற்பார்கள் என்பதால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்து இளவரசரும், டயானாவின் மகனுமான ஹாரி, அமெரிக்காவைச் சேர்ந்த மேகன் மார்கிளை மணக்கவிருக்கிறார்.

இந்த திருமணத்துக்குப் பிறகு இங்கிலாந்து அரசக் குடும்பத்தின் புதிய உறுப்பினராக இணையும் மேகன் சில விஷயங்களை செய்யக் கூடாது. இனி அரச குடும்பத்தினருக்கான கட்டுப்பாடுகள் மேகனுக்கும் பொருந்தும்.

அவை என்னவென்று பார்க்கலாம்.

இங்கிலாந்து அரசு குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் சில விதிகள் பொதுவானது. எந்த காரணத்துக்காகவும் அவை மீறப்படக் கூடாது. தனது அமெரிக்க வாழ்க்கையை மேகன் முற்றிலும் மறந்து விட வேண்டும். இந்த புதிய விதிகளை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்.

அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அணியும் ஆடைகளில் எந்த வாசகமும் இருக்கக் கூடாது. கருத்துகளை சொல்லும் ஆடைகளையோ, வாசகம் பொறித்த ஆடைகளையோ அரச குடும்பத்தினர் அணியக் கூடாது. நாகரீகமான ஆடையையே அணிய வேண்டும்.
 

விலங்கின் முடியால் உருவாக்கப்பட்ட எந்த ஆடையையும் மேகன் அணியக் கூடாது. இது 12வது நூற்றாண்டில் மன்னர் 3வது எட்வார்ட் பிறப்பித்த உத்தரவாகும்.

பொதுவிடங்களில் ரொமான்ஸ்: கூடவே கூடாது. இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பொதுவிடங்களில் தங்களது காதலை வெளிப்படுத்தவே கூடாது. அவர்கள் அடக்கமாகவே இருக்க வேண்டும்.

சாப்பிடுவதற்கான  விதிகள்: இங்கிலாந்து ராணி எலிசபெத்துடன் உணவு சாப்பிடும் போது, அவர் உணவை சாப்பிட்டு முடித்த பிறகு, வேறு யாரும் சாப்பிடக் கூடாது என்பது விதி. அரச குடும்பத்தைச் சேர்ந்த யாரும், ராணியுடன் சாப்பிடும் போது, இந்த விதியை நிச்சயம் பின்பற்ற வேண்டும். அதாவது, எல்லா விஷயத்திலும் அவரை பின்பற்ற வேண்டும் என்பதே இதன் அடிப்படை. எனவே, அனைவரும் உணவருந்தும் போது, ராணி எலிசபெத் சாப்பிட்டு முடித்துவிட்டார் என்றால், அவருடன் உணவருந்தும் அனைவருமே சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும்.
 

அரச குடும்பத்தைச் சேராதவர்களை அரச குடும்பத்தினர் தொடக் கூடாது. ஒரு வேளை திருமணத்துக்குப் பிறகு மேகன் தனது தாய், தந்தையைக் கட்டிப்பிடிக்க விரும்பினால் அது முடியாது. ஒரு இளவரசியாக வேண்டும் என்றால் அதற்கான விலையைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

அரச குடும்பத்தினர் நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒன்றாகத்தான் கொண்டாட வேண்டும். இதுவும் விதி.

பாதுகாப்புக் காரணங்களைக் கருதி, அரச குடும்பத்தினர் ஒன்றாக எங்கும் பயணிக்கக் கூடாது. அதே சமயம், நீண்ட தூர பயணங்களையும் மேற்கொள்ளக் கூடாது என்பதும் விதி. தற்போது பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டிருப்பதால், அரச குடும்பத்தினர் ஒன்றாக பயணிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

அரச குடும்பத்தினர் எந்த காரணத்துக்காகவும் வாக்களிக்கக் கூடாது. அரச குடும்பத்தினரின் வாக்குகள் தவறான முறையில் மக்களிடையே பிரசாரம் செய்யப்படும் வாய்ப்பு உள்ளதால் இந்த விதி அமலில் உள்ளது.

அரசியலில் ஈடுபடக் கூடாது. அரசுப் பதவிகளையும் வகிக்கக் கூடாது. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பதவிகளைப் பெற்று அதனை துஷ்பிரயோகம் செய்யலாம் என மக்கள் கருதுவார்கள் என்பதால் இந்த விதி கடைபிடிக்கப்படுகிறது.

இவையெல்லாவற்றுக்கும் மேலாக, மேகன் தனது விரல் நகங்களுக்கு அடர் நிற நெயில் பாலிஷ் போட விரும்பினால் அது முடியாது. ஏன் என்றால், அரச குடும்ப பழக்க வழக்கங்களின் படி அடர் நிற நெயில் பாலிஷ் போடுவது ஆபாசம் என்று கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com