ஓட்டு கேட்க மட்டும் வீடு வீடாகச் செல்லும் அமைச்சர்கள் மக்கள் துன்பப்படும் போதும் அவர்களைச் சந்திக்க வேண்டும்!

இந்த அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கூலி ஆகி விட்டதற்கு இதுவும் ஒரு உதாரணமாகி இருப்பதே உண்மை. ஏற்கனவே டெல்டா பகுதி விவசாயத்தை ஒட்டுமொத்தமாக ஒழித்து அங்குள்ள மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து
ஓட்டு கேட்க மட்டும் வீடு வீடாகச் செல்லும் அமைச்சர்கள் மக்கள் துன்பப்படும் போதும் அவர்களைச் சந்திக்க வேண்டும்!

கஜா புயலால் தமிழக டெல்டா பகுதி மக்கள் கடுமையான சேதாரத்தில் சிக்கி அவதியுறும் இத்தருணத்தில் அந்தத் தொகுதிகளைச் சார்ந்த அமைச்சர்கள் பலர் புயல் சேதங்களையும், மக்களின் துயரங்களையும் பொருட்படுத்தாமல் டெல்டா மக்களைப் புறக்கணிப்பது குறித்து மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி காட்டமான கேள்விகளை முன் வைத்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் திருமுருகன் காந்தி முன் வைத்த குற்றச்சாட்டுகள்...

'எல்லா ஊர்களிலும் விழா நடத்துகிறீர்களே, அங்கெல்லாம் அந்த ஊர்களில் எல்லாம் போய் உட்காரத் தெரிந்திருக்கிறதில்லையா... அதே போல புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் சென்று உட்கார வேண்டியது தானே? ஏன் உட்காரவில்லை? மக்களோடு மக்களாக ஏன் நிற்கத் தோன்றவில்லை?  மக்கள் தங்கியிருக்கும் நிவாரண முகாம்களுக்குச் சென்று தங்க வேண்டியது தானே? அங்கு என்ன சாப்பாடு கிடைக்கிறதோ அதையே அமைச்சர்களும் சாப்பிடுங்க. பிறகு அவர்கள் போட்டும் ஓட்டு மட்டும் கிடைக்கிறதில்லையா உங்களுக்கு? பிறகு அவர்களது துக்கத்தில் ஏன் நீங்கள் பங்கெடுக்க மாட்டேனென்கிறீர்கள்? அப்படியென்றால் மக்கள் எதிர்வினையாற்றத்தான் செய்வார்கள். அது மக்களின் தவறல்ல! மக்களிடம் ஓட்டு கேட்பதற்கு மட்டும் வீடு, வீடாகச் செல்லத் தெரிந்த அமைச்சர்களுக்கு மக்களுக்கென துயர் வரும் போதும் அவர்களுடன் இணைந்து தோள் கொடுக்கும் மனம் கொண்டு மக்களைச் சந்திக்க வேண்டும். அமைச்சர்களால் அது முடியவில்லை இல்லையா? புயலால் பாதிப்படைந்த தொகுதிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் உடனே அவரவர் தொகுதிகளுக்குச் சென்று மக்கள் நிவாரணப் பணிகளைச் செய்திருக்க வேண்டுமா இல்லையா? அவர்கள் சென்னையில் இருந்தும் எதுவும் செய்யவில்லை.

அப்படியான நேரங்களில் தான் மக்கள் தங்களை ஆள்பவர்களின் மீதான கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். அது நியாயமான கோபம் தானே! புயலால் பாதிப்படைந்தவர்கள் சுமார் 2 லட்சம் பேரை நிவாரண முகாம்களில் தங்க வைத்து மூன்று வேளை உணவும், தண்ணீரும் கொடுத்து பாதுகாப்பு அளித்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள். நான்கு மாவட்டங்களில் மக்கள் தொகை எவ்வளவு? அதிகாரிகளிடம் அவர்களைப் பற்றிய கணக்கீடுகள் இருக்குமே... அதில் குடிசைப் பகுதிகள் எத்தனை? அத்தனை பேரும் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் தானே? அவர்கள் அத்தனை பேருக்கும் புகலிடம் அளிக்கப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தால் மக்கள் அரசின் செயலை பாராட்டி இருப்பார்களே! அமைச்சர்களை தொகுதிகளில் வரவேற்றிருப்பார்களே? அவர்கள் ஏன் அப்படிச் செய்யவில்லை? அப்படியென்றால் மக்களுக்கான நிவாரணங்கள் எதுவும் சரிவரச் செய்யப்படவில்லை என்பது தானே நிஜமாகிறது.

இந்த அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கூலி ஆகி விட்டதற்கு இதுவும் ஒரு உதாரணமாகி இருப்பதே உண்மை. ஏற்கனவே டெல்டா பகுதி விவசாயத்தை ஒட்டுமொத்தமாக ஒழித்து அங்குள்ள மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து மீத்தேன் எடுப்பதற்கும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கும் அப்பகுதிகளை தனியார் நிறுவனங்களுக்கு அடிமட்ட விலையில் தாரை வார்த்துக் கொடுக்க நினைக்கிறது மத்திய அரசு. அதற்கு மாநில அரசு ஒத்துப்போகிறது. இப்போது வரையிலும் சேதங்களைக் கணக்கிட்டு முடியவில்லை. அந்த அளவுக்கு பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை குலைத்துப் போட்ட கஜா புயல் சீற்றத்தை தேசியப் பேரிடராக அறிவிப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு என்ன கஷ்டம்? அவர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து எடுத்தா நிவாரணப் பணிகளைச் செய்யப் போகிறார்கள்? மக்களிடமிருந்து பெற்ற வரிப்பணத்தில் இருந்து தானே நிவாரணப் பணிகளைச் செய்யப் போகிறார்கள். பிறகு இத்தகைய பேரழிவை தேசியப் பேரிடராக அறிவிப்பதில் எடப்பாடி, ஓ பி எஸ்ஸுக்கு என்ன கஷ்டம்? ஏன் அவர்கள் பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? திண்டுக்கல். கொடைக்கானல் வரை கஜா புயலின் பாதிப்பு இருக்கிறது. இது தேசியப் பேரிடர் இல்லையா? இப்படியான நேரங்களில் மாநில அரசும், மத்திய அரசும் வேடிக்கை பார்க்கும் மனநிலையில் இருப்பதைக் கண்டு தான் இதன் பின்னணியில் கார்ப்பரேட் லாபங்களைக் கணக்கிடும் உள்நோக்கம் இருக்கிறது என்று நாங்கள் எண்ணுகிறோம்.'

என திருமுருகன் காந்தி கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான தமது கருத்துக்களையும், கேள்விகளையும் செய்தியாளர் சந்திப்பின் போது முன் வைத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com