நீங்கள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தினமணி நாளிதழின் வாசகராக இருந்தால், 'தினமணி 85' சிறப்பிதழுக்கு உங்கள் சேவை எங்களுக்குத் தேவை.
தினமணி நாளிதழ் 85-ஆவது ஆண்டு இதழியல் பணியை நிறைவு செய்து 86வது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறது. அதைக் கொண்டாடும் விதமாக தினமணி 85 என்கிற சிறப்பிதழ் வெளிவருகிறது.
தினமணி பத்திரிகை வெளியாகி 85 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, வெளியாகும் தினமணி 85 என்கிற சிறப்பிதழில் தமிழ் அறிஞர்களும், நிறைஞர் அல்லது முனைவர் பட்டம் பெற்றவர்களும் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், நீங்கள் தினமணியின் அரை நூற்றாண்டுக்கும் மேலான தினமணி வாசகராக இருந்தால் உங்களுக்கும் ஒரு அரிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தினமணிக்கும், உங்களுக்குமான தொடர்பு குறித்தும், தினமணி குறித்தும் உங்களுடைய பதிவை வரவேற்கிறோம்.
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.. உங்கள் கருத்தை ஒரு பக்கத்துக்கு மிகாமல் எழுதி, புகைப்படத்துடன் உங்களைப் பற்றிய தன்விவரக் குறிப்புடன் உடனடியாக கீழ்க்காணும் முகவரிக்கு அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
இதன் மூலம் நீங்கள் அனுப்பும் பதிவு, உங்கள் புகைப்படத்துடன் தினமணி 85 சிறப்பிதழில் வெளியாகும் வாய்ப்பு கிடைக்கும் என்பதை இங்கே மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
முகவரி
ஆசிரியர்,
தினமணி நாளிதழ்,
எக்ஸ்பிரஸ் கார்டன்ஸ்,
எண்.29, இரண்டாவது முதன்மைச் சாலை,
அம்பத்தூர் தொழிற்பேட்டை,
சென்னை - 600 058
மின்னஞ்சல் - dinamani85@dinamani.com
•••
மேலும் படிக்க..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்! எதற்கு தெரியுமா?

33 வயது நடிகை மிருணாள் தாக்குர், 24 வயது கிரிக்கெட் வீரர் ஜெய்ஸ்வால் டேட்டிங்?

நடிகரான இயக்குநர் - பியார் பிரேம கல்யாணம் வெளியீட்டுத் தேதி!

ரூ. 2,500 உரிமைத் தொகை எப்போது? யாரை ஏமாற்ற முயற்சிக்கிறது தவெக அரசு? நயினார் நாகேந்திரன்
விடியோக்கள்

மேக்கேதாட்டு அணை; முதல்வர் தெளிவாக இருக்கிறார்!: அமைச்சர் செங்கோட்டையன் | TVK | NEET



