கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐடிடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

உ.பி., ம.பி., பிகார், ராஜஸ்தான் ஆண்களுக்கு வேலை இல்லை: பெங்களூரு சிஇஓ பதிவு வைரல்!

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிகார், ராஜஸ்தானை சேர்ந்த ஆண்கள் பணியமர்த்தப்பட மாட்டார்கள் சிஇஓ அறிவித்துள்ளது குறித்து...

mens

கோப்புப் படம்

Published On :

தனது நிறுவனத்தில் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிகார், ராஜஸ்தானை சேர்ந்த ஆண்கள் பணியமர்த்தப்பட மாட்டார்கள் என பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

நிறுவனத்திற்குள் நடந்த நீண்ட விவாதத்திற்குப் பிறகும் வாக்குவாதங்களுக்குப் பிறகும் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த ஏ1 ஸ்போர்ட்ஸ் வேர்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கார்த்திக் ஷெனாய். இவர் தனது நிறுவனத்தில் கடைபிடிக்கப்படவுள்ள பணியமர்த்தும் கொள்கைகள் குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எக்ஸ் தளப் பக்கத்தில் கார்த்திக் ஷெனாய் பதிவிட்டுள்ளதாவது:

''இதனை அறிவிப்பதற்காக வருந்துகிறேன்; ஆனால் நீண்ட விவாதம் மற்றும் வாக்குவாதத்திற்குப் பிறகு, இன்று நாங்கள் இதை மிகத் தெளிவாகத் தெரிவித்துக்கொள்கிறோம். வட இந்தியாவில் இந்த 4 மாநிலங்களில் இருந்து வரும் ஆண்களை நாங்கள் பணிக்கு எடுத்துக்கொள்ளப்போவதில்லை.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பிகார். எங்களுடன் ஏற்கெனவே ஒரு ராஜஸ்தானி பணிபுரிந்து வருகிறார். அவர் இந்த முடிவுக்கு 100% ஒப்புதல் தெரிவித்துள்ளார்'' எனப் பதிவிட்டுள்ளார்.

தலைமைச் செயல் அதிகாரியின் இந்தப் பதிவுக்கு பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நான்கு மாநிலங்களில் உள்ள ஆண்களை பொதுமைப்படுத்தும் வகையில் இப்பதிவு உள்ளதாகப் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த மாநிலங்களைச் சேர்ந்த பலர் பல முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்து வருவதாகவும், இத்தகைய பொதுமைப்படுத்துதலுக்கு எதிராக அவர்கள் குரல் கொடுக்க வேண்டும் எனவும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

எக்ஸ் பதிவு

எக்ஸ் பதிவு

Summary

Bengaluru CEO bans male hires from UP, Rajasthan, Bihar, Madhya Pradesh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.