பிகார்: நிதீஷ் குமார் மகனின் நிகழ்ச்சியில் மூத்த தலைவரிடம் செயின் பறிப்பு!
பிகார் சுகாதார அமைச்சர் நிஷாந்த் குமாரின் நிகழ்ச்சியில் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவரிடம் செயின் பறிக்கப்பட்டுள்ளது...

பிகாரில் நிஷாந்த் குமாரின் வரவேற்பு நிகழ்ச்சியில் மூத்த தலைவரிடம் தங்க செயின் பறிப்பு... - எக்ஸ்
பிகார் சுகாதாரத் துறை அமைச்சர் நிஷாந்த் குமாரின் வரவேற்பு நிகழ்ச்சியில் ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் ஒருவரிடம் செயின் பறிக்கப்பட்டுள்ளது.
பிகார் முன்னாள் முதல்வர் நிதீஷ் குமாரின் மகனும், சுகாதாரத் துறை அமைச்சருமான நிஷாந்த் குமார் இன்று (செப். 5) முசாஃபர்பூரில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அவருக்கு ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்கள் பிரம்மாண்ட வரவேற்புப் பேரணி நடத்தினர். சாக்ரி சௌக் பகுதியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு நிஷாந்த் குமாருக்கு மலர்தூவி வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான ராஜேஷ் மண்டல் அணிந்திருந்த தங்க செயினை மர்ம நபர்கள் பறித்ததாகக் கூறப்படுகிறது. சுமார் ரூ. 7 லட்சம் மதிப்பிலான தங்க செயின் தனது கழுத்தில் இருந்து காணாமல் போனதை உணர்ந்த ராஜேஷ் பதற்றத்துடன் அதைத் தேடும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக அங்கு பணியில் இருந்த காவலர்களிடம் அவர் தகவல் தெரிவிக்க தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவரது தங்க செயின் கிடைக்காததால் ராஜேஷ் மண்டல் துர்கி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Summary
A gold chain was snatched from a senior Janata Dal (United) leader at a reception event for Bihar Health Minister Nishant Kumar.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




