இன்ஃப்ளூயன்சர்களுக்கு ஜாக்பாட்! அரசின் திட்டங்களை விளம்பரம் செய்தால் ரூ. 10,000!
பிகாரில் அரசின் திட்டங்களை காணொலியாக விளம்பரம் செய்யும் இன்ஃப்ளூயன்சர்களுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படுவது குறித்து...
பிகார் இன்ஃப்ளூயன்சர்களுக்கு ஜாக்பாட்... - பிரதிப் படம்
பிகாரில் அரசின் திட்டங்களை காணொலியாக விளம்பரம் செய்யும் இன்ஃப்ளூயன்சர்களுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என மாநில அரசு அறித்துள்ளது.
பிகாரில் மாநில அரசின் திட்டங்களை காணொலியாக உருவாக்கி, அதனை சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வோருக்கு ஊக்கத்தொகை அளிக்கும் புதிய விதிகளுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பிகார் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள இந்த திருத்தப்பட்ட விதிகளின்படி, பிகார் அரசின் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்து இன்ஃப்ளூயன்சர்கள் (Influencers) உருவாக்கும் உள்ளடக்கங்கள், சரிபார்க்கப்பட்டு, 30 நாள்களுக்குப் பிறகு பெறும் ஒவ்வொரு லட்சம் பார்வைகளுக்கு (Views) ரூ. 10,000 பெறுவதற்கான தகுதிபெறும்.
இவர்களின் சமூக ஊடகக் கணக்குகள், பக்கங்கள், சேனல்களில் பின்தொடர்பவர்கள் குறித்த விவரங்கள் அவ்வப்போது சரிபார்க்கப்படும். ஏனெனில், சில சமூக ஊடகக் கணக்குகளில் போலியான பின்தொடர்பவர்கள் மற்றும் பார்வைகளும் காட்டுகின்றன.
Summary
Bihar's offer to influencers that Make govt scheme videos, earn up to Rs 1 lakh
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





