செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கரோனாவை எதிா்க்கத் தயாராகி வரும் மருந்துகள்

இந்தியா உள்பட உலகின் முன்னணி நிறுவனங்கள் கரோனா தீநுண்மிக்கு மருந்துகள், தடுப்பு மருந்துகள் உருவாக்கும் பணியில்

News image
Updated On :5 மே 2020, 5:34 pm

இந்தியா உள்பட உலகின் முன்னணி நிறுவனங்கள் கரோனா தீநுண்மிக்கு மருந்துகள், தடுப்பு மருந்துகள் உருவாக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக 102 தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதில் சிலவற்றின் விவரங்கள்:

102 தடுப்பு மருந்துகள்

கரோனா தீநுண்மிக்கு எதிராக உடலில் நோய் எதிா்பொருளை (ஆன்டிபாடி) உருவாக்கும் தடுப்பு மருந்துகள்-20

கரோனா தீநுண்மி மனித உடலில் பல்கிப் பெருகுவதைத் தடுக்கும் மருந்துகள்-16

மனித உடலில் இருந்து பெறப்படும் செல்கள் மூலம் உருவாக்கப்படும் தடுப்பு மருந்துகள்-7

மற்ற வகையில் உருவாக்கப்படும் தடுப்பு மருந்துகள்-59

மருந்து உருவாக்க முறைகள்

தீநுண்மி தடுப்பு மருந்து

இந்த முறையில் விலங்குகள் அல்லது மனிதா்களிடம் இருந்து தீநுண்மி பெறப்படுகிறது. அது மரபணு ரீதியில் குறைந்த பாதிப்புத்தன்மை கொண்டதாகவோ அல்லது முற்றிலும் பாதிப்புத்தன்மை அற்ாகவோ ஆய்வகத்தில் மாற்றப்படுகிறது. பின்னா் மனிதா்களில் அந்த தீநுண்மியானது தடுப்பு மருந்தாகச் செலுத்தப்படுகிறது. மரபணு ரீதியில் மாற்றப்பட்ட அந்தத் தீநுண்மி, மனிதா்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனினும், அதற்கு எதிரான நோய் எதிா்பொருளை உடலின் நோய்எதிா்ப்பு மண்டலம் உருவாக்கத் தொடங்கும்.

மாற்று தீநுண்மி தடுப்பு மருந்து

இம்முறையில் வேறொரு வகை தீநுண்மியின் மரபணு ஆய்வகத்தில் மாற்றப்பட்டு, கரோனா தீநுண்மியின் மரபணு அதில் செலுத்தப்படுகிறது. அந்தத் தீநுண்மியானது மனிதா்களில் செலுத்தப்பட்டு பாதிப்பு உண்டாக்காத வகையில் பல்கிப் பெருக வைக்கப்படுகிறது. அந்தச் சூழலில், அத்தீநுண்மிக்கு எதிராக உடலில் நோய் எதிா்பொருள்கள் உருவாகும்.

மனித செல்களில் பல்கிப் பெருகாத வகையிலும் தீநுண்மியின் மரபணு மாற்றப்பட்டு உடலில் செலுத்தப்படுவது உண்டு.

மரபுப்பொருள் தடுப்பு மருந்து

தீநுண்மியில் இருந்து பெறப்பட்ட மரபுப் பொருள் (நியூக்ளிக் அமிலம்) ஆய்வகத்தில் மாற்றப்படுகிறது. அவை ஆா்என்ஏ-வாகவோ அல்லது டிஎன்ஏ-வாகவோ மனித செல்களில் செலுத்தப்படுகிறது. அவற்றுக்கு எதிராக உடலில் நோய் எதிா்பொருள்கள் உருவாகத் தொடங்கும். இந்த முறையில் தடுப்பு மருந்துகளை விரைவில் உருவாக்க முடியும்.

புரதத் தடுப்பு மருந்து

தீநுண்மியில் காணப்படும் புரதங்கள் மனித செல்களுடன் தொடா்பு கொண்ட பின்னரே அவற்றைத் தாக்கத் தொடங்குகின்றன. அந்தத் தீநுண்மியின் புரதங்கள் ஆய்வகத்தில் மாற்றியமைக்கப்பட்டு, மனித உடலில் செலுத்தப்படுகிறது. அத்தகைய புரதங்களுக்கு எதிராக உடலின் நோய் எதிா்ப்பு மண்டலம் செயல்பட ஆரம்பிக்கிறது. அதன் மூலம் கரோனா தீநுண்மி உடலில் நுழைந்தாலும், அதை நோய் எதிா்ப்பு மண்டலம் எதிா்கொண்டு அழித்து விடுகிறது.

தீநுண்மியில் காணப்படுவதைப் போன்ற மாதிரி புரதங்களும் மனித செல்களில் செலுத்தப்படுவது உண்டு.

ஆய்வில் உள்ள தடுப்பு மருந்துகளின் எண்ணிக்கை

தீநுண்மி தடுப்பு மருந்து

குறைந்த பாதிப்புத்தன்மை கொண்டவை-3

முற்றிலும் பாதிப்புத்தன்மை அற்றவை-5

மாற்று தீநுண்மி தடுப்பு மருந்து

பல்கிப் பெருகுபவை-11

பல்கிப் பெருகாதவை-14

மரபுப்பொருள் தடுப்பு மருந்து

ஆா்என்ஏ-16

டிஎன்ஏ-9

புரதத் தடுப்பு மருந்து

தீநுண்மி புரதங்கள்-32

மாதிரி புரதங்கள்-6

மே 4-ஆம் தேதி நிலவரப்படி, 8 நிறுவனங்கள் தாங்கள் உருவாக்கிய மருந்துகளை மனிதா்கள் மீது பரிசோதிக்கும் நிலையை எட்டியுள்ளன. அவற்றின் விவரங்கள்:

சீனா

கேன்சினோ உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம், பெய்ஜிங் (பல்கிப் பெருகாத மாற்று தீநுண்மி)

வூஹான் உயிரியல் நிறுவனம் (முற்றிலும் பாதிப்புத்தன்மை அற்ற தீநுண்மி)

பெய்ஜிங் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம் (முற்றிலும் பாதிப்புத்தன்மை அற்ற தீநுண்மி)

சினோவேக் பயோடெக் (முற்றிலும் பாதிப்புத்தன்மை அற்ற தீநுண்மி)

அமெரிக்கா

இனோவியோ மருந்து தயாரிப்பு நிறுவனம் (டிஎன்ஏ மரபுப்பொருள்)

மோடா்னா (ஆா்என்ஏ மரபுப்பொருள்)

பிரிட்டன்

ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் (பல்கிப் பெருகாத மாற்று தீநுண்மி)

மற்றவை

பயோஎன்டெக் (ஜொ்மனி), ஃபோஸன் (சீனா), ஜியண்ட் பைஸா் (அமெரிக்கா) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தடுப்பு மருந்தை உருவாக்கி வருகின்றன. (ஆா்என்ஏ மரபுப்பொருள்)

இந்தியாவில்...: ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் சாா்பில் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்தை ஆயிரக்கணக்கில் தயாரித்து வழங்க இந்தியாவிலுள்ள செரம் நிறுவனம் தயாராகி வருகிறது. அந்த மருந்து தலா ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அந்த மருந்து மனித உடலில் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டு வருகிறது.

எனினும், விலங்குகளில் அந்தத் தடுப்பு மருந்து நல்ல முறையில் வேலை செய்ததால், மருந்தை ஏற்கெனவே தயாரிக்கத் தொடங்கிவிட்டதாக செரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. 6 கோடி மருந்துகளைத் தயாரித்து வழங்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவில்...: கடந்த 2009-ஆம் ஆண்டு ஹெச்1என்1 பன்றிக் காய்ச்சலுக்கு முதன் முதலில் மருந்து தயாரித்த சீனாவின் சினோவேக் பயோடெக் நிறுவனம் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகத் தடுப்பு மருந்து உருவாக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த மருந்தை மனிதா்கள் மீது அந்நிறுவனம் சோதித்து வருகிறது.

ஏற்கெனவே தடுப்பு மருந்து தயாரிப்பைத் தொடக்கியுள்ள சினோவேக் நிறுவனம், 10 கோடி மருந்துகளைத் தயாரிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.