இதன் காரணமாக தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களின் பெயர்களை 35 வினாடிகளிலும், 1 முதல் 100 வரையிலான எண்களை உடனடியாக எழுதியும், ஆங்கில எழுத்துகளைப் படித்தும், அவற்றை எழுதியும் பழகிக் கொண்டான். அதேபோல பழங்கள், பொருள்களின் வடிவங்கள், நிறங்கள், கோள்கள், மாதங்கள், கிழமைகள், கண்டங்கள் போன்றவற்றின் பெயர்களைக் கூறியும், அடையாளம் காட்டியும் வந்ததோடு ஆங்கிலம் மற்றும் தமிழில் ரைம்ஸ்களையும் கூற பழகிக் கொண்டான். இவனுக்கென பிரத்யேகமாக யாரும் எதையும் கற்றுத்தராத நிலையில் தனது சகோதரி படிப்பதைப் பார்த்தே இவனும் பழகிக் கொண்டது வித்தியாசாமன முயற்சியாக இருந்தது.