அறிவியல் ஆயிரம்: மார்பகப் புற்றுநோய் ஏன் எலும்பில் பரவுகிறது?

மார்பகப் புற்றுநோய் மெட்டாஸ்டாஸிஸ்(metastasis) நிலையில் ஏன் எலும்பில் பரவுகிறது? என்பது தொடர்பாக ஜெனீவா ஆய்வாளர்கள் ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மார்பகப் புற்றுநோய் மெட்டாஸ்டாஸிஸ்(metastasis) நிலையில் ஏன் எலும்பில் பரவுகிறது? என்பது தொடர்பான ஒரு புதிய கண்டுபிடிப்பு, ஜெனீவா பல்கலைக்கழக ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டு இதுகுறித்த தகவல்கள் ஏப்ரல் 21, 2022 அன்று அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

புற்றுநோய்  செல்களின் தன்மை

புற்றுநோய் செல்கள் ஒரு முதன்மைக் கட்டியிலிருந்து பிரிந்து மற்ற உறுப்புகளுக்கு இடம்பெயரும்போது, ​​இது 'மெட்டாஸ்டேடிக் புற்றுநோய்' என்று அழைக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த மெட்டாஸ்டேஸ்களால் பாதிக்கப்பட்ட உறுப்புகளின் நிலை, அவற்றின் தோற்றத்தின் திசுக்களின் தன்மையைப் பொருத்தது. மார்பகப் புற்றுநோயில், 'மெட்டாஸ்டேடிக் புற்றுநோய் செல்கள் ' என்பவை பொதுவாக எலும்புகளில் உருவாகின்றன. இதனை புற்றுநோய் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பரவுகிறது என்று கூறுகிறோம். 

புரதம் கண்டுபிடிப்பு

புற்றுநோய் செல்கள் நகர்வைப் பொருத்தவரை மெட்டாஸ்டாசிஸ் நிலையில் பாதிக்கப்பட்ட உறுப்புகளை எது தீர்மானிக்கிறது என்பதை ஆய்வு செய்யும் முயற்சியில், ஜெனீவா பல்கலைக்கழகத்தின் குழு, சூரிச்சின் ( ETH Zurich) ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து ஈடுபட்டது.

இந்த ஆய்வுக் குழுவானது, மெட்டாஸ்டாசிஸ் நிலையில் இந்த நிகழ்வில் ஈடுபட்டுள்ள ஒரு புரதத்தை அடையாளம் கண்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு என்பது மெட்டாஸ்டாசிஸ் நிலையை கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சை அணுகுமுறைகளின் வளர்ச்சிக்கு நிச்சயமாக வழிவகுக்கும். இது தொடர்பான செய்திகள் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communications) இதழில் வெளியிட்டுள்ளனர்.

மெட்டாஸ்டேடிக் புற்றுநோய் செல்கள் நகர்தல்

புற்றுநோய்க்கட்டி என்பது அது உருவான  முதன்மை இடத்திலிருந்து, அதன் புற்றுநோய் செல்கள் அவற்றின் நுண்ணிய சூழலை ஆக்கிரமித்து, பின்னர் ரத்தம் மற்றும் நிணநீர் நாளங்கள் வழியாக உடலின் மற்ற தொலைதூர ஆரோக்கியமான திசுக்களுக்கு பரவி மெட்டாஸ்டேசிஸ் செல்களை உருவாக்கலாம். மார்பகப் புற்றுநோயின் விஷயத்தில், மெட்டாஸ்டேடிக் புற்றுநோய் செல்கள் முதன்மையாக, முக்கியமாக எலும்புகளைத் தாக்கி காலனித்துவப்படுத்துகின்றன. ஆனால், இந்த மெட்டாஸ்டேடிக் புற்றுநோய் செல்கள் கல்லீரல், நுரையீரல் அல்லது மூளை போன்ற பிற உறுப்புகளிலும் காணப்படலாம்.

டியூமர் (Tumour) உயிரணுக்களின் நெகிழ்வுத்தன்மை

மெட்டாஸ்டேடிக் செல்களின் செயல்முறையின் வெவ்வேறு நிலைகளுக்குக் காரணமான மூலக்கூறு மற்றும் செல்லின் இயக்க வழிமுறைகள் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை என்பதே உண்மை. இருப்பினும் அங்குள்ள செல்களின்  நெகிழ்வுத்தன்மைதான் இதற்கு முக்கிய காரணகர்த்தா என்பதும் இப்போதுள்ள செய்துள்ள ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த செயல்பாடு என்பதும்கூட அந்த செல்களின் செயல்பாடு மற்றும் வடிவத்தை மாற்றும் செல்களின் திறனைக் குறிக்கிறது. இதனால், மெட்டாஸ்டேடிக்காக மாறும் டியூமர் கட்டி செல்கள் அவற்றின் வடிவத்தை மாற்றி நகர்ந்து செல்லும் செல்களாகவும் மாறக்கூடும்.

மெட்டாஸ்டேடிக் செல்களை கட்டுப்படுத்தும் ZEB1 புரதம் 

அறிவியல் துறையின் மூலக்கூறு மற்றும் உயிரணு உயிரியல் துறையின் பேராசிரியர் டிடியர் பிகார்டின் (Didier Picard) ஆய்வகத்தில்  மார்பகப் புற்றுநோய் தொடர்பான விஷயத்தில், மெட்டாஸ்டேடிக் செல்களின் செயல்முறைகளை எது நிர்வகிக்கிறது என்பதை அறிய மிகவும்  ஆர்வமாக ஈடுபட்டனர். அவரது குழு, பேராசிரியர் நிக்கோலஸ் அசெட்டோவின்(Nicolas Aceto) குழுவுடன் இணைந்து எலிகளில் இந்த மார்பகப் புற்றுநோய் பற்றிய செயல்முறைகளை ஆய்வு செய்தது. உயிரியலாளர்கள் மார்பகப் புற்றுநோய் உயிரணு, மெட்டாஸ்டேடிக் உயிரணுவாக இடம் பெயர்ந்ததில், அவர்கள்   உயிரணுவின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க அல்லது தூண்டிவிட எந்த பொருள் உதவுகிறது என்று ஆய்வு செய்து அறிந்தனர். அப்படி அறியப்பட்ட பொருள் என்பது ZEB1 என்ற புரதத்தின் சாத்தியமான பங்குதான் என்பதை ஆய்ந்தறிந்தனர்.

எலிகளில் நிலைமை வேறு

'மனித மார்பகப் புற்றுநோய் உயிரணுக்களுடன் இடமாற்றம் செய்யப்பட்ட எலிகள், மனிதப் பெண்களின் புற்றுநோய் செல்கள்போல எலும்புக்குப் பரவாமல், நுரையீரலில் மெட்டாஸ்டாசிஸை உருவாக்குகின்றன. எலும்புகளில் அல்ல' என்கிறார் மூலக்கூறு மற்றும் உயிரணு உயிரியல் துறையின் ஆராய்ச்சியாளரும் ஆய்வின் முதல் ஆசிரியருமான நஸ்டரன் முகமதி கஹாரி 

'எலும்பு திசுக்களில் மெட்டாஸ்டாசிஸைத் தூண்டும் திறன் கொண்ட காரணிகளை நாங்கள் அடையாளம் காண முயன்றோம், குறிப்பாக ZEB1 காரணியின் விளைவை சோதித்தோம்' என்று நஸ்டரன் முகமதி கஹாரி தெளிவாகத் தெரிவிக்கிறார். ZEB1 காரணிதான் எலும்புக்கு செல்ல மெட்டாஸ்டாசிஸை இயக்குகிறது என்று சொல்கிறார்.

சோதனை மூலம் தெளிவு

புற்றுநோய் செல்களின் இடம்பெயர்வு மற்றும் ஊடுருவல் சோதனைகளில், விஞ்ஞானிகள், ZEB1 -யை வெளிப்படுத்தும் புற்றுநோய் செல்கள் அதை வெளிப்படுத்தாத புற்றுநோய் செல்கள் போலல்லாமல் எலும்பு திசுக்களுக்கு நகர்வதைக் கண்டறிந்தனர். மனித மார்பகப் புற்றுநோய் செல்கள் எலிகளின் பாலூட்டி சுரப்பிகளில் இடமாற்றம் செய்யப்பட்டபோது இந்த முடிவுகள் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டன. புற்றுநோய் செல்கள் ZEB1 -யை வெளிப்படுத்தவில்லை என்றால், மெட்டாஸ்டாஸிஸ் நிலை முதன்மையாக நுரையீரலில் ஏற்பட்டது. இதற்கு நேர்மாறாக, ZEB1 இருந்தபோது, ​​பெண்களைப் போலவே எலும்புகளிலும் மெட்டாஸ்டேஸிஸ் செல்கள்  உருவாகின.

புற்றுநோயைக் கட்டுப்படுத்த புதிய அணுகுமுறை?

'எனவே இந்த காரணி என்பது டுயூமர் கட்டி உருவாக்கத்தின்போது வெளிப்படுத்தப்படுகிறது, இது எலும்புகளுக்கு மெட்டாஸ்டேடிக் பண்புகளைப் பெற்ற செல்களை வழிநடத்துகிறது என்று கருதலாம்' என ஆய்வின் ஆசிரியரான டிடியர் பிகார்ட் கூறுகிறார்.

இந்த ஆய்வு மெட்டாஸ்டேடிக் செல்கள் செயல்பாட்டின போது டியூமர் கட்டி உயிரணுக்களின் நெகிழ்வுத்தன்மையை அதன் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துகிறது. எனவே, இப்படி இந்த காரணிகள் உருவாகாமல் இருக்க மற்றும் நீண்ட காலத்திற்கு, மெட்டாஸ்டேஸ்கள் தோன்றுவதைத் தடுக்க புதிய சிகிச்சை அணுகுமுறைகளைக் கையாள இந்த ஆய்வு மிகவும் பயனுள்ளதாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com