வா்த்தக காப்புரிமை கவுன்சிலின் அடுத்தக் கூட்டம் அக்டோபா் 15-ஆம் தேதி கூட இருக்கிறது. அதில் கனடா, ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகள், ஜப்பான், ஸ்விட்சா்லாந்து, பிரிட்டன், அமெரிக்கா ஆகியவை உறுப்பு நாடுகளாக இருக்கின்றன. கொவைட் 19 தொடா்பான மருந்துகளுக்கும், தடுப்பூசிக்கும் காப்புரிமை பெறுவதற்கு ஆய்வுகளை நடத்திக் கொண்டிருக்கும் முக்கியமான மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் உலக வா்த்தக நிறுவனத்தின் அறிவுசாா் காப்புரிமை குழு நாடுகளைச் சோ்ந்தவை. அந்த நாட்டு அரசுகள் அந்த நிறுவனங்களின் நலனை கருத்தில்கொண்டுதான் செயல்படும் என்பதைக் கூற வேண்டியதில்லை.