லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள்
இன்டர்நெட் பிரவுசிங் சென்டர் அமைக்க குறைந்தது 5 கம்ப்யூட்டர்கள் தேவை. அவற்றில் வெப் காமிரா, காதோடு பொருத்திக் கொள்ளக் கூடிய ஹெட்ஃபோன் உள்ளிட்ட வசதியும் வேண்டும். இதற்குத் தலா ரூ.25 ஆயிரம் தேவைப்படும்.


இன்டர்நெட் பிரவுசிங் சென்டர் அமைக்க குறைந்தது 5 கம்ப்யூட்டர்கள் தேவை. அவற்றில் வெப் காமிரா, காதோடு பொருத்திக் கொள்ளக் கூடிய ஹெட்ஃபோன் உள்ளிட்ட வசதியும் வேண்டும். இதற்குத் தலா ரூ.25 ஆயிரம் தேவைப்படும்.
கம்ப்யூட்டர்களை இணைக்கும் "ஹப்' ஒன்று (ரூ.1500) தேவை. மோடம் -ரூ.4 ஆயிரம். மின்சப்ளை தடைபட்டால் 3 மணி நேரத்துக்கு கம்ப்யூட்டர்கள் இயங்க உதவும் 2 கே.வி.ஏ. திறனுள்ள யுபிஎஸ் பொருத்துவது அவசியம். அதன் விலை ரூ.50 ஆயிரம்.
அறையை ஏ.சி. செய்வதற்கு ரூ.28 ஆயிரம். டேபிள், சேர் ஏற்பாடு செய்ய ரூ.12,500. அறைக்குள் அலங்காரங்கள் செய்யும் செலவு தனி.
இவைதவிர ஒரு தொலைபேசி இணைப்பும், 100 மணி நேர இன்டர்நெட் இணைப்பும் பெற வேண்டும்.
பிரவுசிங் சென்டர் நடத்துபவர்களுக்காக 128 கே.பி.பி.எஸ். சக்தியில் இன்டர்நெட் இணைப்புகளை பிஎஸ்என்எல் அளிக்கிறது. அதற்கு முன்பணமாக ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். இதுதவிர 100 மணி நேரத்துக்கு ரூ.2100 கட்டணம்.
அறை வாடகை, அட்வான்ஸ் தொகை, மின் கட்டணம், வேலையாட்களுக்கான ஊதியம் போன்ற செலவுகளும் உண்டு. கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்களை வாங்கி, தொலைபேசி இணைப்புடன் அறையைத் தயார் செய்வதற்கு மட்டும் ரூ.1.3 லட்சம் தேவைப்படும். அறைக்கான அட்வான்ஸ் ரூ.20 ஆயிரம் என்று வைத்துக் கொண்டாலும் பிரவுசிங் சென்டர் தொடங்க ரூ.1.5 லட்சம் தேவைப்படும்.
கீழ் தளத்திலேயே பிரவுசிங் சென்டர்களை அமைப்பது நல்லது.
இதில் ஒரு மணி நேர உபயோகத்துக்கு இன்டர்நெட் கட்டணம் ரூ.5, மின் செலவுக்கு ரூ.5, தொலைபேசிக் கட்டணம் ரூ.24 என ரூ.34 செலவாகும். இதர செலவுகளுக்கு ரூ.6 சேர்த்தால் ஒரு மணி நேரத்துக்கான செலவு ரூ.40. சென்டரில் உள்ள 5 கம்ப்யூட்டர்களும் ஒரே இன்டர்நெட் இணைப்பில் செயல்படும்.
சென்னையில் ஒரு மணி நேரம் இன்டர்நெட் உபயோகிக்க ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 5 கம்ப்யூட்டர்கள் மூலம் ஒரு மணி நேரத்துக்கு ரூ.75 கிடைக்கும். செலவுகள் போக ரூ.35 லாபம். இதையே 10 கம்ப்யூட்டர்களாக அதிகரித்தால் ரூ.150 கிடைக்கும். செலவு போக ரூ.110 லாபம்.
மாலையில் 5 மணியில் இருந்து 11 மணி வரை 5 கம்ப்யூட்டர்கள் முழுமையாக உபயோகத்தில் இருக்குமானால் ரூ.210 லாபம் கிடைக்கும். 10 கம்ப்யூட்டர்களாக இருந்தால் ரூ.660 லாபம். பகல் நேரத்தில் மற்ற நேரங்களிலும் வாடிக்கையாளர்கள் வருவார்கள். அதுவும் லாபமே.
இதுதவிர தகவல்களைப் பதிவு செய்து கொள்ளும் வசதியை அளித்து, பிளாப்பி, சி.டி. ஆகியவை விற்றால் அதிலும் லாபம் கிடைக்கும். இதில் அனைத்து கம்ப்யூட்டர்களும் ஒரே சமயத்தில் உபயோகத்தில் இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் லாபகரமாக இருக்கும். அதற்கேற்ப இளைஞர்கள் எளிதில் அணுகக் கூடிய இடமாகத் தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.
பிரவுசிங் செய்ய வருபவர்களுக்கு குளிர்பானங்களும் விற்கலாம். அதிலும் வருமானம் கிடைக்கும். எனவே, பிரவுசிங் சென்டர் நல்ல இடத்தில் அமைந்தால் மாதத்துக்கு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கிடைக்கும். மையம் அமைத்துவிட்டால் அதைப் பராமரிக்க ஒரு ஆள் மட்டும் போதும். உரிமையாளரே அதைப் பார்த்துக் கொண்டால் சம்பளமும் மிச்சம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...