இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

மருத்துவப் படிப்பு: 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்கள்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஆர்.ஜி.சுகுமார் கூறினார்.

News image
Updated On :21 மே 2013, 11:19 am IST

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஆர்.ஜி.சுகுமார் கூறினார்.

சென்னை உள்பட 18 அரசு மருத்துவக் கல்லூரிகளின் 1,823 எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 836 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியின் 85 பி.டி.எஸ். இடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 909 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றில் மாணவர்களைச் சேர்க்க மே 9-ஆம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு வந்தது. மொத்தம் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அளிக்க மே 20 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கடைசி நேற்று 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன.

மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு ரேண்டம் எண் (சம வாய்ப்பு எண்)-ரேங்க் பட்டியல் வெளியீடு, கலந்தாய்வு தொடங்கும் தேதி ஆகியவை ஜூன் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.