தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

இக்னோவில் உளவியல் படிப்பு

புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், முதுகலையில் உளவியல் படிப்பு இந்தாண்டு முதல் வழங்கப்படுகின்றது.

News image
Updated On :12 ஜூன் 2013, 10:28 am

புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், முதுகலையில் உளவியல் படிப்பு இந்தாண்டு முதல் வழங்கப்படுகின்றது.

உளவியல் பட்டப் படிப்புக்கு சமீப காலமாக, பள்ளிகள், மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்து துறைகளிலும் தேவைகள் அதிகரித்து வருகின்றது. பெரும்பாலான பள்ளிகளில் முழுநேரம் எம்.ஏ படித்த முதுகலை உளவியல் பட்டதாரிகளே XI, XII வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

மேலும் இந்தியாவில் உள்ள மறுவாழ்வு மையங்கள், மன ஆரோக்கியம் மற்றும் உடல் ஊனமுற்றோர் மையங்களில் பணி புரிவதற்கு, தகுதியான உள்வியல் துறை முதுகலை பட்டதாரிகள் தேவைப்படுகின்றன.

எனவே இதை கருத்தில் கொண்டு இக்னோ பல்கலைக்கழகம் தரமான கல்வி, குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. மேலும் இத்துறையில் மேற்படிப்பு படிக்க தவறிய மாணவர்களுக்கு உதவும் வகையில் அரிய வாய்ப்பினை இக்னோ அளித்துள்ளது.

இப்படிப்பு குறித்து மேலும் விரிவான விவரங்களுக்கு www.ignou.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது அருகில் உள்ள "ஸ்டடி சென்டரில்" விண்ணப்ப கையேடுகளை பெற்றுக் கொள்ளலாம். ரூ.200 கல்வி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தபால் மூலம் கையேடுகளை பெற ரூ.250 ஆகும். இக்னோ பல்கலைக்கழகத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.