இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

ஜெகதீஸ் போஸ் நேஷ்னல் சயின்ஸ் உதவித்தொகை

இளநிலை முதலாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு, ஜெகதீஸ் போஸ் நேஷ்னல் சயின்ஸ் டேலன்ட் சர்ச் உதவித்தொகை வழங்கப்படுகின்றது.

News image
Updated On :2 செப்டம்பர் 2013, 12:39 pm IST

இளநிலை முதலாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு, ஜெகதீஸ் போஸ் நேஷ்னல் சயின்ஸ் டேலன்ட் சர்ச் உதவித்தொகை வழங்கப்படுகின்றது. இந்த உதவித்தொகைக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியாக 2013ம் ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இளநிலை முதலாமாண்டில் (பி.எஸ்சி, பி.இ, பி.டெக், பி.ஸ்டட்ஸ், எம்.பி.பி.எஸ்) உள்ளிட்ட படிப்புகள் படித்துக் கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் படிக்கும் கல்லூரிகள் மேற்கு வங்க மாநிலத்தின் கீழ்  பதிவு பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000ம், பிஇ, பி.டெக், தகுதியான மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.80,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் www.jbnsts.org என்ற இணையதளத்தில் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எழுத்துத்தேர்வு செப்.,29ம் தேதி நடைபெறுகிறது.

கூடுதல் தகவல்களுக்கு www.jbnsts.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.