ரயில் வண்டியில் தீப்பற்றி எரிந்தால், அதைத் தானே அணைக்கும் வகையில் தானியங்கி பாதுகாப்புக் கருவியை கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் மின்னணுவியல் மற்றும் கருவியல் துறை இறுதியாண்டு மாணவர்கள் முரளிவிஜய், மதன், அழகேஷ் கண்ணா ஆகியோர் துறைத் தலைவர் டாக்டர் கண்ணபிரான், பேராசிரியர் செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி தங்களது புராஜக்ட் செய்தனர்.
இது குறித்து மாணவர்கள் கூறுகையில்:
ரயிலில் மின்கசிவு, பெட்ரோல், பட்டாசு போன்ற பொருட்களால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அப்படி தீ விபத்து ஏற்படும் போது பயணிகள் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. இதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு கருவியை வடிவமைத்துள்ளோம்.
இந்தக் கருவியில் லெவல் சென்சார், தெர்மிஸ்டர், ஜிஎஸ்எம், எல்இடி பதிவு மற்றும் ஒளிப்பதிவு ஆகிய உதிரிப் பாகங்கள் உ்ள்ளன.
முதலில் தீ விபத்து ஏற்படுவது சென்சார் மூலம் கண்டுபிடிக்கப்படும். உடனே ரயிலில் உள்ள தண்ணீர் மோட்டார் மூலம் தீ விபத்து ஏற்பட்ட பெட்டியினுள் மட்டும் வேகமாக தெளிப்பான் மூலம் தெளிக்கப்படும். தீ மேலும் பரவாத வகையில் ரயில் தானாகவே நிறுத்தப்படும். பின்பு அருகில் உள்ள ரயில் நிலையங்கள், தீயணைப்புத் துறை மற்றும் கார்டு ஆகியோருக்கு ஜிஎஸ்எம் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். குளிர்சாதன பெட்டிகள், சாதாரண பெட்டிக்கான கருவி வடிவமைப்பு அதற்கேற்றார்போல் மாற்றப்பட்டுள்ளது.
மேலும் தண்ணீரின் அளவு ஏதேனும் ஒரு பெட்டியில் குறைந்தாலும், தகவல் அந்தப் பெட்டி காப்பாளருக்கு தெரிவிக்கும் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மாதிரிக் கருவியை காப்புரிமை பெறுவதற்கு சென்னை வடிவமைப்பு காப்புரிமைக் கழகத்திற்கு விண்ணப்பித்துள்ளோம் என மாணவர்கள் தெரிவித்தனர்.
மாணவர்களின் புதிய வடிவமைப்பை பல்கலைக்கழகத்தின் வேந்தர் க.ஸ்ரீதரன், பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன், துணைப் பதிவாளர் பி.ஜி.குருசாமிபாண்டியன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பட்டா வைத்திருப்போர் கவனத்துக்கு... இணையவழி சேவைகள் தொடக்கம்! முழு விவரம்!

இதுவரை நடந்தவை முக்கியமல்ல, அடுத்த இரண்டு போட்டிகள்தான் முக்கியம்: மோர்னே மோர்க்கல்

திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து!

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: பங்கு சந்தையில் ரூ. 16.32 லட்சம் கோடி இழப்பு!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

