அண்ணாமலைப் பல்கலை தமிழியல்துறையில் மாணவர் நல மையம் திறப்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறையில் இந்திய மொழிப்புலத்திற்கான மாணவர் நல மையத் திறப்பு விழா நடைபெற்றது.


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறையில் இந்திய மொழிப்புலத்திற்கான மாணவர் நல மையத் திறப்பு விழா நடைபெற்றது.
இந்திய மொழிப்புல முதல்வர் பேராசிரியர் முனைவர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். தமிழியல் துறைத் தலைவர் முனைவர் ப.ஞானம் வரவேற்றார். தமிழகஅரசு முதன்மைச் செயலரும், பல்கலைக்கழக நிர்வாகியுமான ஷிவ்தாஸ்மீனா மாணவர் நல மையத்தை திறந்து வைத்துப் பேசினார். அவர் பேசுகையில் மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுவதை குறிப்பிட்டார். விழாவில் பதிவாளர் ந.பஞ்சநதம், கலைப்புல முதல்வர் ராஜேந்திரன், அறிவியல் புல முதல்வர் முனைவர் சபேசன், இந்தித்துறை தலைவர் ஜெகநாதரெட்டி, மொழியியல் மைய இயக்குநர் முனைவர் ச.ராஜா, மொழிப்புல மாணவர் நல மைய அலுவலர் முனைவர் அரங்க.பாரி, கலைப்புல மாணவர் நல மைய அலுவலர் ரவி, அறிவியல் புல மாணவர் நல மைய அலுவலர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
கருத்தரங்க காட்சிப்பேழை திறப்பு விழா:
தமிழியல் துறையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய கருத்தரங்கம், பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. 2003 ஆண்டு முதல் 2014- ஆண்டு வரை நடைபெற்ற கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை நூலாக தொகுக்கப் பெற்று 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளாக பல்கலைக்கழகம் வெளிக்கொண்டு வந்துள்ளன. இக்கருத்தரங்கு ஆய்வுக்கோவைகளின் காட்சிப்பேழை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. தமிழியல்துறைத் தலைவர் முனைவர் ப.ஞானம் தலைமை வகித்தார். பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா காட்சிப்பேழையினை திறந்து வைத்துப் பேசினார். அவர் பேசுகையில் இதுபோன்ற காட்சிப்பேழைகளை அனைத்து புலத்திலும் நிறுவ வேண்டும் என கேட்டுக்கொண்டார். விழாவில் பதிவாளர் ந.பஞ்சநதம், மொழிப்புல முதன்மையர் வி.திருவள்ளுவன், பேராசிரியர் முனைவர் அரங்க.பாரி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...