மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கொரிய பல்கலை.யுடன் கலசலிங்கம் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்

கொரியா நாட்டில் உள்ள யுங்காம் பல்கலைக்கழகத்துடன், விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

News image
Updated On :22 டிசம்பர் 2015, 10:55 am

கோ.ஜெயக்குமார்

கொரியா நாட்டில் உள்ள யுங்காம் பல்கலைக்கழகத்துடன், விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் ஆட்டோமொபைல் துறைத் தலைவர் எம்.உதயகுமார், கொரியா, யுங்காம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு, தற்போதைய புதிய முறை உற்பத்தி உருவாக்கும் முறைகள் குறித்தும் இதற்கான கணினி முறை இயந்திரவியல் குறித்தும் விளக்கினார்.

யுங்காம் பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல் துறை டீன் டாய்ஜோ கோ விடம் கலந்துரையாடினார். மேலும் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் ஆட்டோமொபைல் துறையின் புதிய ஆராய்ச்சி குறித்தும் பரிமாற்றம் செய்து கொண்டார்.

மேலும் கலசலிங்கம் மாணவர்கள் தங்களது ஒரு பருவத்தை, யுங்காம் பல்கலைக்கழகம் சென்று படிப்பதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் இரு பல்கலைக்கழகங்களும் புரிந்துணர்வு  ஒப்பந்தம் செய்து கொண்டன.கொரியா சென்று திரும்பிய பேராசிரியர் உதயகுமாரை, பல்கலைக்கழக்ததின் வேந்தர் க.ஸ்ரீதரன், இயக்குநர் டாக்டர் சசி ஆனந்த், துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன் ஆகியோர் செவ்வாய்கிழமை பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.