இந்திய ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

டேராடூனிலுள்ள ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் 2016-ம் கல்வியாண்டுக்கான 8-ம் வகுப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

டேராடூனிலுள்ள ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் 2016-ம் கல்வியாண்டுக்கான 8-ம் வகுப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2003 ஜன.2 மற்றும் 2004 ஜூலை 1-ம் தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களில் பிறந்தவராகவும், 2016 ஜன.1-ம் தேதி அன்று 7-ம் வகுப்பு படித்து கொண்டிருப்பவராக அல்லது முடித்தவராக உள்ள மாணவர்கள் இக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்.

தகுதித் தேர்வு விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பை பொதுப் பிரிவினர் பதிவஞ்சலில் பெற ரூ.430, துரித தபாலில் பெற ரூ 480, பட்டியல் மற்றும் அட்டவணை இனத்தவர் பதிவஞ்சலில் பெற ரூ.385, துரித தபாலில் பெற ரூ. 435, THE COMMANDANT DEHRUN என்ற பெயரில் டேராடூன் பாரத ஸ்டேட் வங்கியில் மாற்றத் தக்க வகையில் காசோ லை (டிராப்ட்) எடுத்து அதனை கமாண்டன்ட், ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூ ரி, டேராடூன் - 248 003 உத்திரகாண்ட் என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பம் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் தமிழ்நாடு அரசு பணியாளார் தேர்வாணையம், சென்னை-3 என்ற முகவரிக்கு மார்ச் 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு ஜூன். 1,2, ஆகியத் தேதிகளிலும், வாய்மொழித் தேர்வு அக்.6-ம் தேதி நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு THE COMMANDANT DEHRUN இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள முன்னாள் படைவீரர் நலஉதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com