தேவகோட்டை பள்ளி மாணவிகள் இரண்டு பேர் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை காலை வெளிடப்பட்டது.இதில் மாநில அளவில் மூன்றாம் இடம்பெற்ற மாணவர்கள் தேவகோட்டை சேர்ந்த இரண்டு மாணவிகள் இடம்பெற்று சாதனை படைத்துள்ளனர்.இதில் பெத்தாளாச்சி பெண்கள் மாணவி வைஷ்ணவி 500 மதிப்பெண்களுக்கு 497 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.அவர் பெற்ற மதிப்பெண்கள் தமிழ் 99,ஆங்கிலம் 98,கணிதம் 100,அறிவியல் 100,சமூக அறிவியல் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.இவரது தந்தை முருகேசன் முன்னாள் இராணுவ வீரராவார்.மேலும் வைஷ்ணவி கூறுகையில்,மாநிலத்தில் மூன்றாம் இடம்பிடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும்,11ம் வகுப்பில் கணிதம் மற்றும் உயிரியல் பாடப்பிரிவுகளை எடுத்து படிக்கப்போவதாகவும்,மாவட்ட ஆட்சியராக வருவதே தனது இலக்காகவும் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இதே போல் இன்பென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி நித்யஸ்ரீ மாநிலத்தில் மூன்றாம் இடம்பெற்றுள்ளார்.இவர் தமிழ் 98,ஆங்கிலம் 99 ,கணிதம் 100,அறிவியல் 100,சமூக அறிவியல் 100 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.இவரது தந்தை பாலசுப்ரமணியம் பாத்திரக்கடையில் வேலை செய்து வருகிறார்.11ம் வகுப்பில் கணிதம் உயிரில் எடுத்து படிக்க இருப்பதாகவும்,எதிராகலத்தில் மருத்துவராக வரவேண்டும் என்பதே தனது இலட்சியம் எனவும் தெரிவித்தார்.இரண்டு மாணவிகளும் சிறப்பாக மதிப்பெண் பெற உதவிய பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








