தமிழக எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளில் ஏற்பட்டுள்ள 257 காலியிடங்களுக்கு தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் கலந்தாய்வு நடைபெறும்.
தமிழக எம்.பி.பி.எஸ், பல் மருத்துவ இடங்களுக்கான மூன்றாம் கட்டக் கலந்தாய்வு சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது. அரசு, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ் இடங்கள், சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. கல்லூரி இடங்கள், அரசு, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு பல் மருத்துவ இடங்கள் என மொத்தம் 337 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்க மொத்தம் 3,825 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதில் 1,120 பேர் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். கலந்தாய்வின் முடிவில் மொத்தம் 83 இடங்கள் பூர்த்தியாகி உள்ளன.
மீதம் உள்ள இடங்கள்:
அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5 இடங்கள், சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் 12 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 9, அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 2 இடங்கள், தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் 229 என மொத்தம் 257 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. மீதம் உள்ள இடங்களுக்கு தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் கலந்தாய்வு நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கலந்தாய்வுக்கு சுமார் 4,500 பேர் அழைக்கப்பட்டுள்ளனர் என தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


