சென்னை: துணை மருத்துவப் படிப்புகளுக்கு புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில், 3,503 காலியிடங்கள் உள்ளன.
தமிழகத்தில் பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட 9 துணை மருத்துவப் படிப்புகளில் அரசு கல்லூரிகளில் 538 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 4,765 இடங்கள் என 5,303 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 22) தொடங்கியது.
திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் அரசு கல்லூரிகளில் 531 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 528 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் என 1,059 இடங்கள் நிரம்பின.
இதையடுத்து, புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்பதற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. முடிவில் அரசு கல்லூரிகளில் 3 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 738 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் என 741 இடங்கள் நிரம்பின.
மொத்த இடங்களில் 1800 இடங்கள் நிரம்பின. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 538 இடங்களில் 534 இடங்கள் நிரம்பியுள்ளன.
இன்று கலந்தாய்வு இல்லை: கிருஷ்ண ஜெயந்திக்காக வியாழக்கிழமை விடுமுறை. ஆகவே, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 26) கலந்தாய்வு மீண்டும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்

அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு

அஸ்ஸாமில் மினி பேருந்து - லாரி மோதிக்கொண்டதில் பிரபல பிஹு நடனக் கலைஞர் பலி, 11 பேர் காயம்

தவறான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆம் ஆத்மி: ராகவ் சத்தா
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

